வணக்க வழிபாடுகள் தொடர்பானவை - ஸ்கலிதமும் குளிப்பும்
Last Updated (Saturday, 01 November 2008 12:56) Thursday, 30 October 2008 11:22
ஸ்கலிதமும் குளிப்பும்
கேள்வி : ஒருவருக்கு உடலுறவினாலன்றி வேறு வகைகளில் ஸ்கலிதமானால் அவருக்கு உடல் முழுவதும் குளித்தல் கடமையாகுமா? தலை நீங்கக் குளித்தால் போதுமாகாதா? தலையில் குளிப்பதை முடிந்தவரை தவிர்த்துக் கொள்ளும்படி ஒருவருக்கு வைத்தியர் எச்சரித்திருந்தால், அவர் மனைவியுடன் சேர்க்கையில் ஈடுபட்டபின் மேற்கண்டவாறு தலை நீங்கக் குளித்தால் போதுமானதா? விளக்கம் தரவும்.
பதில் : தலை உட்பட உடலில் அனைத்து உறுப்புக்களையும் நீரினால் கழுவுவதையே இஸ்லாமிய ஷரீஅத் 'அல்குஸ்லு (குளித்தல்) எனக் கூறுகிறது. ஒருவருக்கு உடலுறவினாலோ வேறு வழிகளில் இந்திரியம் வெளிப்பட்டால் அனைத்து உறுப்புகளும் நனையும்படி குளிப்பது கடமையாகும். இன்றேல் 'ஜனாபத் எனும் பெருந்தொடக்கு நீங்க மாட்டாது.
நம்பத்தகுந்த ஒரு மருத்துவர் குளிப்பதன் மூலம் பெரும் ஆபத்து ஏற்பட இடமுண்டு என ஒரு நோயாளியை எச்சரித்தால் குளிப்;பதற்குப் பதிலாக தயமமும் செய்து கொள்ள மார்க்கம் அவரை அனுமதிக்கின்றது.
