வணக்க வழிபாடுகள் தொடர்பானவை - ஸக்காத்தும் தங்கத்தின் நிஸாபும்
Last Updated (Saturday, 01 November 2008 12:56) Thursday, 30 October 2008 11:22
ஸக்காத்தும் தங்கத்தின் நிஸாபும்
கேள்வி: ஸக்காத்தில் தங்கத்திற்குரிய 'நிஸாப்' குறைந்த பட்ச அளவினை விளக்குக?
பதில்: நவீன அளவை முறைப்படி எண்பத்தி ஐந்து கிராம் தங்கமே அதற்குரிய நிஸாபாகக் கொள்ளப்படுகிறது. எனவே குறித்த அளவிற்கு மேல் தங்கம் வைத்திருக்கும் ஒருவர் அதற்குரிய ஸகாத்தைச் செலுத்த வேண்டிய வேளையில் பணமாக வழங்குவதாயின் அச்சந்தர்ப்பத்தில் எண்பத்தைந்து கிராம் தங்கத்துக்குரிய விலையை அறிந்து மொத்தத் தொகையில் இரண்டரை வீதம் கொடுக்க வேண்டும்.
பணத்திற்குரிய நிஸாப் அளவையும் தங்கத்தை அடிப்படையாக வைத்து நிர்ணயிப்பதே மிகப் பொருத்தமானதாகும் என்பதையும் கருத்திற்கொள்க. எண்பத்தைந்து கிராம் தங்கம் சுமார் பத்தரைப் பவுண் தங்கத்திற்குச் சமனானதாகும். பணத்திற்குரிய நிஸாப் அளவை வெள்ளியை அடிப்படையாக வைத்து நிர்ணயிக்க வேண்டும் எனக்கூறும் அறிஞர்களும் உளர்.
