தஃவாக்களம்
Last Updated (Saturday, 01 November 2008 12:44) Thursday, 04 September 2008 13:49
இஸ்லாமிய பொருளாதாரத்தை நோக்கி...
ஒரு முஸ்லிம் தனது செல்வத்தை எவ்வாறு திரட்டலாம், அதனை அவன் எவ்வாறு பாதுகாப்பாது, எவ்வழியில் செலவளிக்க வேண்டும் என்ற மூன்று விடயங்கள் பற்றியும் சிறப்பானதும் தெளிவானதுமான வழிகாட்டல்களை இஸ்லாம் முன்வைக்கின்றது. எனவே ஒரு முழுமையான பொருளாதார திட்டத்தை இஸ்லாம் கொண்டிருக்கின்றது எனக் கூறமுடியும்.
இந்நாட்டில் வியாபாரச் சமூகம் எனப் பெயர்பெற்றுள்ள முஸ்லிம்கள் துரதிஷ்டவசமாக வியாபார, மற்றும் கொடுக்கல் வாங்கள் முயற்சிகளில் இஸ்லாத்தை பெரும்பாலும் கடைபிடிப்பதாக தெரியவில்லை. இதற்கு அறியாமை ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது அறிந்தும் அதன் பாரதூரம் விளங்காமல் இருக்கலாம்.
அந்த வகையில் இத்துறையில் ஒரு விழிப்புணர்வை உண்டுபன்னும் நோக்கத்துடன் ஒரு நாள் கருத்தரங்கொன்று நாச்சியாதீவு முஸ்லிம் மகா வித்யாலயத்தில் கடந்த 01- 06 - 2008 காலை 08.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் மூன்று முக்கிய உரைகளும் கலந்துரையாடலும்; இடம் பெற்றது. உலகப் பொருளாதார நெருக்கடியும் இஸ்லாத்தின் தீர்வும் என்ற தலைப்பில் ஜாமிஆ நளீமிய்யாவின் பிரதிப்பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் அவர்களும், உழைப்பு முயற்சிகளில் ஹலால், ஹராம் எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பளீல் அவர்களும், இஸ்லாமிய வங்கி முறையும் அதன் நடைமுறையும் எனும் தலைப்பில் அஷ்ஷெய்க ஸீ. அய்யூப் அலி அவர்களும் நிகழ்த்தினார்கள்.
இந்நிகழ்வில் அனுராதபுர மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான உலமாக்கள், வியாபாரிகள், புத்திஜீவிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து பயன்பெற்றனர்.
அதான் தடை விவகாரத்தில் முன்னேற்றம் ஜம்இய்யதுல் உலமா நடவடிக்கை
ஒலிபெருக்கி மூலம் அதான் சொல்வதைக் கட்டுப்படுத்தும் ஒலி மாசடைதல் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளைப் பாதித்துள்ளமை நாம் அறிந்ததே.
முஸ்லிம் சமூகம் இந்த மார்க்க உரிமையை மீண்டும் அனுபவிப்பதற்கு வகை செய்ய வழிவகுக்கும் முயற்சிகளை பல்வேறு முஸ்லிம் சமூக நிறுவனங்கள் முன்னெடுத்து வருகின்றன. ஆய்வுக்கும் அபிவிருத்திக்குமான செரண்டிப் நிறுவனம் இந்த வகையில் குறிப்பிடத்தக்க பங்கை அளித்திருந்தது.
இந்தத் தொடரில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சென்ற சனி அன்று மாலை நான்கு மணியளவில் கொழும்பிலுள்ள முஸ்லிம் பெண்கள் கல்வி வட்ட கோட்போர் கூடத்தில் கலந்துரையாடலொன்றை ஏற்பாடு செய்திருந்தது.
முஸ்லிம் அமைப்பக்களின் பிரதிநிதிகள் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இதில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் அழைக்கப்பட்டிருந்த போதிலும் முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஹஸன் அலி மட்டுமே கலந்து கொண்டார். ஜனாதிபதியின் ஆலோசகர் ஏ.எச்.எம். அஸ்வரும் வருகை தந்திருந்தார்.
இந்த ஒன்று கூடலின் நோக்கத்தை விளக்கி பேசிய ஜாமிஆ நளீமிய்யாவின் பிரதிப்பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத், மார்க்கத்தை நிலைநாட்டுதல், பரஸ்பரம் ஷூறா செய்தல், அதான் இஸ்லாமிய ஷரீஆவில் பெரும் முக்கியத்துவம் என்பவற்றை தெளிவுபடுத்தினார். இங்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா உட்பட சட்டத்தரணிகள் பலர் இவ்விடயத்தின் சட்ட நுணுக்கங்கள் தொடர்பாக விளக்கினர். நீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாக மாற்ற முடியாது. எனினும், நுணுக்கமாகக் கையாண்டால் சலுகைகளை பெற்றுக் கொள்ள முடியும் என்ற விடயம் இதன் இறுதியில்; தெளிவானது.
ஜாமிஆ நளீமிய்யாவின், தஃவா, ஆய்வு மற்றும் பயிற்சி நெறிகளுக்கான நிறுவனத்தினால் முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கான விஷேட இரு நாள் கருத்தரங்கொன்று கடந்த 2007ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதியும் செப்டம்பர் 01ம் திகதியும் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் முஸ்லிம் மீடியா போரத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களும் மற்றும் அங்கத்தவர்களும் கலந்துகொண்டனர். ''இஸ்லாமிய ஊடகவியல் தர்மம், முஸ்லிம் சமூகத் தலைவர்களது ஆளுமைப் பண்புகள்'' ஆகிய தலைப்புக்களில் அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் அவர்கள் விரிவுரைகளை நிகழ்த்தினார்கள்.
அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் அவர்களும் இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் அமீர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களும் இலண்டன் அழைப்புப்பணி மையத்தின் 10வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த ஜுலை மாதம் 1ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்ட இஸ்லாமிய மாநாடுகள், கருத்தரங்குகள் மற்றும் ஊழியர்களுக்கான விஷேட சன்மார்க்க வகுப்புகள் என்பவற்றில் வளவாலர்களாக கலந்து கொண்டு பல்வேறு தலைப்புக்களில் நிகழ்ச்சிகளை நடாத்தி விட்டு கடந்த ஜுலை மாதம் 22ஆம் திகதி இலங்கை திரும்பினார்கள்.
இலண்டன் அழைப்புப் பணி மையம் தனது 10வது ஆண்டு நிறைவையொடடி ''அழைப்புப் பணி - காலத்தின் தேவை சன்மார்க்கக் கடமை'' எனும் கருப்பொருளில் எதிர்வரும் 2007 ஜுலை மாதம் 1ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 10வது இஸ்லாமிய மாநாடு நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் சிறப்புச் சொற்பொழிவாளராக அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார்கள். இம்மாநாடு தொடர்பான மேலதிக விபரங்களை பெற...
. இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் கொழும்பு பெண்கள் பகுதியினால் கடந்த மே மாதம் 26ஆம் திகதி தொழில்சார் பெண்களுக்கான விஷேட விரிவரையொன்றை தாருல் ஈமானில் ஏற்பாடு செய்தனர். இவ்விஷேட விரிவுரையை அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் அவர்கள் நிகழ்த்தினார்கள். இதில் குறிப்பாக தொழில்ற்துறையில் ஈடுபடும் பெண்களுக்கான சன்மார்க்க விதிமுறைகளும் ஒழுங்குகளும் விரிவாக விளக்கப்பட்டன. இவ்விஷேட விரிவுரையில் சுமார் 200ற்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
