வணக்க வழிபாடுகள் தொடர்பானவை - நோன்பைக் கழாச் செய்தல்
Last Updated (Saturday, 01 November 2008 12:56) Thursday, 30 October 2008 11:22
நோன்பைக் கழாச் செய்தல்
கேள்வி: இந்த வருடம் விடுபட்ட நோன்பை அடுத்த ஷஃபான் 15ம் நாள் பிந்தியதன் பின்னர் நோற்பதன் மூலம் கழாவான அந்த நோன்பு நிவர்த்தியாகுமா? அல்லது அதற்கு முன் நோற்றால்த்தான் நிவர்த்தியாகுமா?
பதில்: ஒரு வருடத்தில் விடுபட்ட ரமழான் நோன்பை அடுத்த ஷஃபான் மாதம் பதினைந்தாம் தினத்துக்கு முன் நோற்றால்தான் கழா நிறைவேற வேண்டுமென்பதில்லை. குறித்த தினத்துக்கு பின்னரும் குறித்த நோன்பை நோற்க முடியும். அடுத்த ரமழான் நோன்பு வந்து விடினும், அதனை நோற்று முடிந்த பின் முன்னைய வருடம் விடுபட்ட நோன்பைக் கழா செய்ய முடியும். ஆயினும், தக்க காரணமின்றி அடுத்த ரமழான் வரை கழாவை நிறைவேற்றாது, பின்னர் நிறைவேற்றுபவர் விட்ட ஒவ்வொரு நோன்பிற்காகவும் இரண்டு கைப்பிடியளவு உணவை பித்யாவாகக் கொடுக்க வேண்டுமென இமாம்களான ஷாபிஈ, மாலிக், அஹ்மத் போன்றோர் கருதுகின்றனர். எந்நிலையிலும் பித்யாக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்றும், நோன்பை நோற்றால் மாத்திரம் போதுமானது என்றும் ஹனபிய்யாக்கள் கருதுகின்றனர். ஹனபிய்யாக்களின் இக்கருத்தே இவ்விடயத்தில் உறுதியானதென நவீன கால அறிஞர்கள் பலர் கூறுகின்றனர்.
