வணக்க வழிபாடுகள் தொடர்பானவை - துன்யாவுடைய விடயங்களை மஸ்ஜிதில் பேசுதல்
Last Updated (Saturday, 01 November 2008 12:56) Thursday, 30 October 2008 11:22
துன்யாவுடைய விடயங்களை மஸ்ஜிதில் பேசுதல்
கேள்வி: துன்யாவுடைய விடயங்களைப் பள்ளிவாயலில் பேசக்கூடாது என்பது சரிதானா?
பதில்: 'பள்ளிவாயிலில் ஆகுமான பேச்சுக்களைப் பேசுவதும் (துன்யாவுடைய விவகாரங்களையும் அவை போன்ற ஆகுமானவற்றையும் பேசுவது) ஆகுமானதாகும். இத்தகைய பேச்சுக்கள் சிரிப்புடன் கலந்ததாக இருப்பினும் சரியே, என இமாம் நவவீ கூறுகிறார். 'நபியவர்களின் காலத்தில் மக்கள் பள்ளிவாயலில் ஜாஹிலிய்யக் காலத்தில் நடந்த விடயங்களை எடுத்துக் கூறிச் சிரிப்போராய் இருந்தனர். நபிகளாரும் புன்முறுவல் பூப்பவர்களாய் இருந்தார்கள்.' (அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு சமுறா, ஆதாரம்: முஸ்லிம்) ஆயினும் பள்ளிவாயலில் வீண் பேச்சுக்களைப் பேசுவது தவிர்க்கப்படல் வேண்டும். தொழுபவர்களுக்கு இடையூறு ஏற்படும் விதத்தில் உரத்த குரலில் பேசுவதும், அல்குர்ஆனை ஓதுவதும் கூட ஹராமானதாகும். ஆயினும், பள்ளிவாயலில் கற்பித்தலின் போது சத்தமிடுவது தவறானதல்ல என அறிஞர்கள் கருதுகின்றனர்.
