வணக்க வழிபாடுகள் தொடர்பானவை - மஃமூம்கள் தொழுகையில் பாதிஹா ஸுராவை ஓதுதல்
Last Updated (Saturday, 01 November 2008 12:56) Thursday, 30 October 2008 11:22
மஃமூம்கள் தொழுகையில் பாதிஹா ஸுராவை ஓதுதல்
கேள்வி: ஐங்காலத்தொழுகையில் இமாம் ஃபாதிஹா ஸுராவை ஓதும்போது அதனை மஃமூம்கள் செவிமடுத்தால் போதுமானதல்லவா? அதனை அவர்கள் பின்னர் ஓத வேண்டிய தேவை இல்லையல்லவா?
பதில்: ஸுரத்துல் ஃபாதிஹா ஓதப்படாத தொழுகை நிறைவேறாது என்பதே அடிப்படையாகும். பர்ளான, ஸுன்னத்தான எல்லாத் தொழுகைகளிலும் ஒவ்வொரு ரக்அத்திலும் ஃபாதிஹாவை ஓதுவது கடமையாகும். ஆனால், ஜமாஅத்தாகத் தொழும்போது இமாம் சத்தமாக ஓதும் தொழுகைகளில் (உம்: இஷா) மஃமூம் ஃபாதிஹாவை ஓதவேண்டியதில்லை. மாறாக அவர் இமாமின் ஓதலுக்குச் செவிமடுக்க வேண்டும். 'அல்குர்ஆன் ஓதப்பட்டால் மௌனமாக இருந்து அதற்குக் காது கொடுங்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவான்' என அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது.
இமாம் சத்தமாக ஓதாத தொழுகைகளைப் பொறுத்தவரையில் (உம்: ளுஹர்) மஃமூம் ஃபாதிஹாவை ஓதுவது வாஜிப் ஆகும்.
சத்தமாக ஓதப்படும் தொழுகைகளிலும் இமாம் ஸுரதுல் ஃபாதிஹா ஓதி முடிந்த பின்னர் மஃமூம் (முடியுமானவரை) அதனை ஓதவேண்டும் என்பது ஷாபிஈ மத்ஹபின் கருத்தாகும்.
