Sheikhagar.org - Official site for sheikhagar
ஏற்றமிகு வாழ்விற்கு இறைமறை
Created On: Saturday, 14 July 2012 15:47
மலேசியாவில் கடந்த ஜூலை 7- 8 ஆகிய தினங்களில் நடைபெற்ற தேசிய திருக்குர்ஆன் மாநாட்டில் அஷ்- ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் அவர்கள் ஆற்றிய கருப்பொருளுரையின் சுருக்கம்

மனிதன் தனது வாழ்வில் இருவகைப் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றான். உடனடிப் பிரச்சினைகள் (Immediate Problems) ஒரு வகை; நித்திய பிரச்சினைகள் (Ultimate Problems) இரண்டாம் வகை. மனித வாழ்வின் உடனடிப் பிரச்சினைகளுக்கு உதாரணங்களாக உணவு, உடை, உறையுள், சுகாதாரம் முதலான தேவைகளைக் குறிப்பிடலாம். இந்த வகைப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு இறைவன் மனிதனுக்கு பகுத்தறிவை (Intellect) வழங்கியுள்ளான். மனிதன் பகுத்தறிவை வைத்து இயற்கையின் சட்டங்களை (Laws Of Nature) கண்டறிகின்றான். இயற்கையின் சட்டங்கள் பற்றி மனிதன் பெற்றுக் கொள்ளும் அறிவே அறிவியல் (Science) என அழைக்கப்படுகின்றது. இவ்வறிவை அவன் பிரயோகிக்கின்ற போது உருவாவதே தொழில்நுட்பம் (Technology) ஆகும். இத்தொழில்நுட்பம் மனிதன் தனது உலக வாழ்வில் எதிர் கொள்ளும் உடனடிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணத் துணை புரிகின்றது.
நான் யார்? நான் எங்கிருந்து வந்தேன்? இறுதியாக எங்கு செல்வேன்? எனது முடிவு என்ன? இவ்வுலக வாழ்வில் நான் என்ன செய்தல் வேண்டும்? இவை மனித வாழ்வுடன் தொடர்பான நித்திய பிரச்சி;னைகள். இவற்றுக்கு மனிதன் பெற்றுள்ள பகுத்தறிவினால் மாத்திரம் தீர்வு காண முடியாது. ஏனெனில், பகுத்தறிவானது காலம்(Time), இடம்( Space) ஆகிய இரண்டினாலும் வரையறுக்கப் பட்டிருக்கிறது. எனவே, இங்கு மனிதனுக்கு மற்றொரு வழிகாட்டல் தேவைப்படுகிறது. அதனைத் தரும் தகுதி காலம், இடம் என்ற வரையறைகளைக் கடந்த, முக்காலங்களையும் அறிந்த, மனிதப் பலயீனங்களிலிருந்தும் விடுபட்ட, குறைகள் குற்றங்கள் இல்லாத ஒருவனுக்கே இருக்க முடியும். இறைவன் மட்டுமே இத்தகுதிகளையும், தன்மைகளையும் பெற்றவன். எனவே, அவனால் மாத்திரமே மனிதனது நித்தியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு தர முடியும். இந்த வகையில் தான் இறைவன் மனிதன் தனது உடனடிப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள அவனுக்கு பகுத்தறிவை வழங்கியது போல நித்திய பிரச்ச்pனைகளுக்கு தெளிவான தீர்வுகளைத் தரும் வகையில் காலத்துக்குக் காலம் இறைத்தூதர்களைத் தெரிவு செய்து அவர்கள் மூலம் தனது வஹி எனும் வழி காட்டலை (Revelation) மனிதனுக்கு வழங்கினான். இறைவனால் வஹியாக இறக்கியருளப்பட்ட வேதங்களின் வரிசையில் இறுதி வேதமாக அமைந்ததே அல்-குர்ஆனாகும்.
பெண்கள் தொழில் புரிதல் - பகுதி 3
Created On: Friday, 22 June 2012 11:03

03. பெண்கள் தொழில் செய்தல் இஸ்லாம் கூறும் அடிப்படைகள்
1. பெண்களின் இயல்பு பாதுகாக்கப்படல் வேண்டும்
பெண்கள் எந்த விவகாரத்தில் ஈடுபடுவதாக இருந்தாலும் அவர்களுக்கே உரிய இயல்பு பாதுகாக்கப்படல் வேண்டும் பெண்மைக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படக் கூடாது. மட்டுமல்ல அவர்களுக்கே உரிய இயல்பு, அவர்களின் சுபாவம், அவர்களின் தன்மைக்கு எவ்வித குந்தகமும் ஏற்படாது என்பதற்கான உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். அவர்களுக்கே உரிய தனியான இயல்பு, அவர்களின் சுபாவம், அவர்களின் தன்மை என்பன பாதுகாக்கப்பட வேண்டும். இது இஸ்லாம் கூறும் முதலாவது அடிப்படை.
2. வீடு என்ற சாம்ராஜ்யத்தின் நிர்வாகம் பாதிக்கப்படக்கூடாது
இஸ்லாம் வலியுறுத்தும் மற்றுமொரு மிக முக்கியமான விடயம்தான், வீடு என்பது பெண்களின் ராஜ்ஜியம் என்பதாகும். அந்த ராஜ்ஜியத்தின் தலைவியாக இருப்பவள் பெண். ஆணின் துணைவியாக, குழந்தைகளின் தாயாக, வீடு என்ற சாம்ராஜ்ஜியத்தின் சொந்தக்காரியாக, நிருவாகியாக இருப்பது பெண்ணே. எனவே, வீடு என்ற சாம்ராஜ்யத்தின் நிர்வாகம், பரிபாலனம் பாதிக்கப்படாமல் இருப்பது மிக முக்கியம்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நீண்ட ஒரு ஹதீஸிலே சொன்னார்கள்:
'நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகள். உங்கள் ஒவ்வொருவரின் பொறுப்புக்கள் பற்றியும் நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்...”
Page 41 of 64
<< Start < Prev 41 42 43 44 45 46 47 48 49 50 Next > End >>
