Sheikhagar.org - Official site for sheikhagar

குழந்தைகள் பால் உள்ள கடமைகள் - குத்பா

Created On: Wednesday, 17 October 2012 20:03

audio Download Here

 

உண்மை, வாய்மை நேர்மை - குத்பா கொள்ளுப்பிட்டி

Created On: Monday, 08 October 2012 16:28

audio Download Here

 

மத நிந்தனையைக் கண்டிப்போம்! நபிகளாருக்கு நட்சாட்சி பகர்வோம்!

Created On: Thursday, 04 October 2012 16:14

இஸ்லாத்தைப் பொதுவாகவும், இறைத்தூதர் முகம்மத் (ஸல்) அவர்களைக் குறிப்பாகவும் விமர்சிப்பவர்கள் வரலாறு நெடுகிலும் இருந்து  வந்துள்ளனர். இந்த வகையில் மேற்குலகை சேர்ந்த பல கீழைத்தேய வாதிகளால் எழுதப்பட்ட பல ஆக்கங்களைக் காண முடிகின்றது. இத்தகைய விமர்சனங்களுக்கு காலத்துக்குக் காலம் இஸ்லாமிய அறிஞர்களும் புத்திஜீவிகளும் அறிவுபூர்வமான மறுப்புகளை அளித்து வந்துள்ளனர். ஆயினும், அண்மைக் காலமாக விமர்சனம் என்ற நிலையைக் கடந்து இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்தியும், இறைத்தூதரை இழிவுபடுத்தியும் மேற்குலக மட்டத்தில் பல்வேறு தரக்குறைவான முயற்சிகள் தொடர்ந்தேர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது. இத்தீய சக்திகள் தமது நடவடிக்கைகளுக்கு அச்சு ஊடகங்களையும், இலத்திரனியல் ஊடகங்களையும் பயன்படுத்தி வருகின்றன. குறிப்பாக யூடியூப், பேஸ்புக், டுயிட்டர் முதலான சமூக வலையத்தளங்கள், வெப்தளங்கள் முதலான நவீன இலத்திரனியல் ஊடகங்களை இவ்விஷமிகள் உச்ச நிலையில் பயன்படுத்தி வருகின்றனர்.

நபியவர்களை தூஷிக்கும் வகையில் அமைந்த கேலிச்சித்திரங்கள், குறுந்திரைப்படங்கள் வரிசையில் கடந்த ஜூலை 02ம் திகதி லுழர வரடிந தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட‘ Innocence of Muslims’  ( முஸ்லிம்களின் அப்பாவித் தனம்) எனும் ஒரு குறுந்திரைப்படம் கடந்த பல வாரங்களாக இஸ்லாமிய உலகில் பெரும் கொந்தளிப்பை ஏற்படு;த்தியுள்ளது. எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போல பிரான்ஸ் நாட்டுப் பத்திரிகையொன்று நபியவர்களைச் சித்தரிக்கும் சில கேவலமான கேலிச்சித்திரங்களை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் வாழும் சோமாலியப் பூர்வீகத்தைக் கொண்ட ஒரு பெண்ணும் இஸ்லாத்தைத் தரக் குறைவாக விமர்சிக்கும் ஒரு கட்டுரையை News Week  சஞ்சிகையில் எழுதியுள்ளார்.

Read more..

   

கருத்துக்குக் கருத்தால் பதிலளிப்போம்!

Created On: Thursday, 27 September 2012 16:35

கடந்த 21.09.2012 அன்று ஜாவத்தை ஜுமுஆ பள்ளிவாசலில் அஷ்ஷெய்க் ஏ.ஸி. அகார் முஹம்மத் (நளீமி) அவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கத்தை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.

தூய்மையும் ஒழுக்கமும் நிறைந்த, உலகமே போற்றுகின்ற ஒரு மாமனிதரை இன்றைய நாகரிகமான உலகில் அநாகரிகமாக சித்திரித்துக் காட்டியிருக்கிறார்கள் முதலாம் உலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று தம்மை பறைசாற்றிக் கொள்பவர்கள்.

மனித உரிமைகளை மீறாதவர்கள், பண்பாடனவர்கள், ஜனநாயகத்தை மதிப்பவர்கள், எழுத்துச் சுதந்திரத்தையும் கருத்துச் சுதந்திரத்தையும் என்றும் எப்போதும் கட்டிக்காப்பவர்கள், பிறரைப் புண்படுத்தாதவர்கள், பயங்கரவாதத்தை அழிக்க வந்தவர்கள், தீவிரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வந்தவர்கள் என தம்மைச் சொல்லிக் கொள்பவர்கள்தான் 160 கோடி மக்களின் இதயங்களில் வாழ்கின்ற புனிதமான இறைத்தூதரை திரைப்படம் என்ற பெயரில் மிகக் கேவலமாக வர்ணித்;து உலக அமைதிக்கு உளைவைத்துள்ளார்கள்.

நமது நாட்டில் ஒரு குக்கிராமத்தில் வாழும் எழுத்தறிவில்லாத ஒரு மனிதன்கூட இவ்வளவு மட்டரகமாக நடப்பானா? நடந்தாலும் நமது நாடோ மூன்றாம் உலக நாடுகளோ கிழக்குலகமோ அதனை அனுமதிக்குமா? நிச்சயமாக அனுமதிக்காது!
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை இலக்கு வைத்து கேவலப்படுத்துகின்ற முயற்சியை இவர்கள் நீண்டகாலமாகவே கனகச்சிதமாகச் செய்து வருகிறார்கள். இத்தொடரான வேலைகளைப் பார்க்கும்போது முஸ்லிம்களை சீண்டிவிடுவதற்கான விளையாட்டாக இவற்றை எடுத்து விட்டார்களோ என நினைக்கத் தோன்றுகிறது.

சுமார் 13 நிமிட முன்னோட்டக் காட்சிகளைக் கண்டு முழு முஸ்லிம் சமூகமும் கொதித்தெழுந்திருக்கும் இச்சந்தர்ப்பத்தில், எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போல பிரான்ஸ் நாட்டில் நபியவர்களைக் கேவலப்படுத்தி சில கேலிச் சித்திரங்களை ஒரு பத்திரிகை வெளியிட்டிருக்கிறது. “அதிர்ச்சியில் இருப்பவர்களுக்கு மேலும் அதிர்ச்சி அளிக்க உள்ளோம்” என அப்பத்திரிகையின் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். உண்மையில் முஸ்லிம் சமூகத்தைப் பார்த்து எள்ளி நகையாடுகின்ற ஒரு நிலையை இவர்கள் உருவாக்க முயற்சிக்கின்றார்கள்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை உயிரிலும் மேலாக மதிக்கின்ற நாங்கள்  இச்சந்தர்ப்பத்தில் அவர்களுக்குச் செய்ய வேண்டிய மிகப் பெரிய சேவை எதுவாக இருக்க முடியும்?

Read more..

 

நபி (ஸல்) அவர்களின் ஒழுக்க மாண்புகள் - நிகாஹ் குத்பா

Created On: Monday, 24 September 2012 12:22

audio Download Here

   

Page 40 of 64

<< Start < Prev 31 32 33 34 35 36 37 38 39 40 Next > End >>

We have 1 guest online

Login here



Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player