Sheikhagar.org - Official site for sheikhagar
கலந்துரையாடலின் மூலம் பிரச்சினைகளைக் கையாளுதல்: ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்
Created On: Wednesday, 13 March 2013 12:02
கலந்துரையாடலின் மூலம் பிரச்சினைகளைக் கையாளுதல்: ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்

கடந்த 15.02.2013 வெள்ளிக்கிழமை அன்று கொல்லுப்பிட்டி ஜுமுஆப் பள்ளிவாசலில் ஜாமிஆ நளீமிய்யாவின் பிரதிப் பணிப்பாளரும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிரதித் தலைவர்களுள் ஒருவருமான அஷ்யெ;க் ஏ.ஸி. அகார் முஹம்மத் (நளீமி) அவர்கள் ஆற்றிய குத்பா பிரசங்கத்தின் சுருக்கத்தை அல்ஹஸனாத் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின் றோம்.
மூன்று தசாப்தத்திற்கும் மேலாக இந்நாட்டில் நிலவிய கோரமான யுத்தம் முற்றுப் பெற்று அனைத்து மக்களும் சமாதானக் காற்றை நுகர்ந்து கொண்டிருக்கும் நல்லதொரு சூழ்நிலையில், இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் பல மட்டங்களில் சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருவதனை நாம் காண்கிறோம். பல்வேறு குற்றச்சாட்டுக்களும் சிலபோது புரளிகளும் கிளப்பப்படுகின்றன. சில ஊடகங்கள் (Media) எரியும் நெருப்பில் எண்ணெய் வார்க்கும் வேலையைக் கச்சிதமாகச் செய்துவரும் அவலத்தையும் காண்கிறோம்.
இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டுகின்ற முன்னெடுப்புகளால் நன்மை அடையப்போவது யாரென்று தெரியவில்லை. ஆனால், எமது நாடும் நாட்டு மக்களும் இதனூடாக நன்மையடையப் போவதில்லை என்பது உண்மை.
சில பிரச்சினைகள், முரண்பாடுகள், சந்தேகங்கள் இல்லாமலில்லை. இவற்றுக்கான தீர்வு என்ன? மிரட்டுவதா, வசைபாடுவதா, கண்டித்து நடப்பதா, துண்டித்து நடப்பதா, அடக்க முற்படுவதா? இவ்வாறான மோதல்கள் ஒருபோதும் பிரச்சினைக்கான முடிவைத் தராது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் சாமுவேல் ஹன்டிங்டன் என்ற ஓர் அமெரிக்க ஆய்வாளர் நாகரிகம் மற்றும் மதங்களுக்கிடையில் முரண்பாடும் மோதலும் தொடரப்போகிறது என எச்சரிக்கை விடுத்தார். அதன் மோசமான விளைவுகளை உலகம் இன்று அனுபவிக்கிறது. அச்சந்தர்ப்பத்தில் நாகரிகங்களுக்கும் மதங்களுக்குமிடையில் மோதலில்லை அவற்றுக்கிடையில் கலந்துரையாடல் வலியுறுத்தப்பட வேண்டும் என இஸ்லாமிய உலகம் தீர்வுகளை முன்வைத்தது.
இஸ்லாம் மோதலை எதிர்பார்க்கின்ற மார்க்கமல்ல. கலந்துரையாடல், பேச்சுவார்த்தை ஊடாக எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்கலாம் தீர்க்க வேண்டும் என வலியுறுத்துகின்ற மார்க்கம். ரிஸாலத், ஆகிரா முதலான இஸ்லாத்தின் அடிப்படையான நம்பிக்கைகளை நிறுவுவதற்குக்கூட புனித அல்குர்ஆன் கலந்துரையாடல் முறையைக் கையாண்டிருப்பதனைப் பார்க்கிறோம்.
கலந்துரையாடலோடு சம்பந்தப்பட்ட பேசுதல், சொல்லுதல், உரையாடுதல், கதைத்தல் முதலான கருத்துக்களைத் தரும் 'கௌல்' என்ற பதத்திலிருந்து தோன்றிய கால, யகூலு, குல், யகூலூன், தகூலூன் போன்ற சொற்கள் அல்குர்ஆனில் சுமார் 1700 தடவைகள் இடம்பெற்றுள்ளன.
அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் இடையிலான கலந்துரையாடல், அல்லாஹ்வுக்கும் மலக்குகளுக்குமிடையிலான கலந்துரையாடல், அல்லாஹ்வுக்கும் ஷைத்தானுக்கும் இடையிலான கலந்துரையாடல், துதர்களுக்கும் சமூகங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல், இறைதூதர்களுக்கும் அவர்களுடைய எதிரிகளுக்குமிடையிலான கலந்துரையாடல்கள், நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல், நல்லவர்களுக்கிடையிலான கலந்துரையாடல், கெட்டவர்களுக்கிடையிலான கலந்துரையாடல்கள்... என்று அல்குர்ஆன் எல்லோர் மத்தியிலும் முரண்பாடுகளைக் களைவதற்கும் சத்தியத்தைத் நிலைநிறுத்துவதற்கும் உண்மையைப் புரிந்து கொள்வதற்கும் உடன்பாட்டை உருவாக்குவதற்கும் கலந்துரையாடல் என்ற பலம்வாய்ந்த ஆயுதத்தைப் பயன்படுத்தியிருப்பதனைப் பார்க்கின்றோம்.
இலங்கையில் சமகால பிரச்சினை தொடர்பாக தெஹிவளை பெரிய பள்ளிவாயிலில் ஆற்றப்பட்ட விஷேட உரை
Created On: Monday, 04 March 2013 17:04

சம கால பிரச்சினைகளும் தீர்வுகளும் - குத்பா
Created On: Saturday, 23 February 2013 08:39

இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல், இமாம் இப்னு தைமிய்யா - ஆய்வுச் சுருக்கம்
Created On: Sunday, 10 February 2013 15:53

இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல், இமாம் இப்னு தைமிய்யா (ரஹிமஹுமுல்லாஹ்)
வாழ்வும் பணியும் ஓர் ஆய்வுக் குறிப்பு
அஷ்ஷெய்க் ஏ.ஸி. அகார் முஹம்மத் (நளீமி), பிரதிப் பணிப்பாளர், ஜாமிஆ நளீமிய்யா
இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹிமஹுல்லாஹ்)
இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் வாழ்ந்த காலம் ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டின் இரண்டாம் அரைப் பகுதியும் மூன்றாம் நூற்றாண்டின் முதலாம் அரைப் பகுதியுமாகும். இக்காலப் பிரிவு பிக்ஹு இமாம்களின் இறுதிப் பகுதியாகும். மேலும் இது இஸ்லாமிய அறிவு, கலை, கலாசார வரலாற்றில் மிக வளமான காலமுமாகும். மறுபக்கத்தில் அந்நிய கலாசார நாகரிகங்களின் அறிவுக் கருவூலங்களை முஸ்லிம்கள் உள்வாங்கிய காலப் பிரிவும் இதுவாகும். குறிப்பாக, கிரேக்க தத்துவம் வியக்கத்தக்க விதத்தில் முஸ்லிம் தத்துவவியலாளரிடம் செல்வாக்குச் செலுத்திய காலமாக இது விளங்கியது. மதத்திற்கும் தத்துவத்திற்குமிடையே இணக்கம் காணும் சிந்தனை முஸ்லிம் தத்துவ மேதைகளிடம் வளர்ந்திருந்தது கதரிய்யாக்கள் தோன்றியிருந்தனர் முஃதஸிலாக்கள் உருவாகி முதிர்ச்சி பெற்றிருந்தனர். அதுவரை தூய இஸ்லாத்தின் காவலராக இருந்து வந்த ஆட்சியாளர்களிடமும் புதுக் கோட்பாடுகளின் தாக்கம் எதிரொலிக்கலாயிற்று. கலீபா அல்மஃமூனும் முஃதஸிலா கொள்கையினால் கவரப்பட்டிருந்தார். அல்லாஹ்வின் பண்புகளில் சில வற்றை இல்லாமல் செய்யும் ஷகுர்ஆன் படைக்கப்பட்டது| என்ற கோட்பாட்டையும் ஏற்றுக் கொண்டிருந்தார். இக்கருத்துடன் முரண்பட்ட அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஆவைச் சேர்ந்தோர் பல்வேறு பிரச்சினைகளுக்கும் நெருக்குதல்களுக்கும் உள்ளாகும் நிலை உருவாகியிருந்தது.
உண்மையில் இஸ்லாமிய வரலாற்றில் அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஆ உலமாக்கள் அரசியல் பீடத்திலிருந்து எதிர்நோக்கிய முதல் அறைகூவலாக இது கருதப்படுகின்றது. முஃதஸிலாக்களின் குறித்த கொள் கையை ஏற்றுக் கொள்ளாத ஒருவரை அரச பதவியொன்றில் அமர்த்துவதோ அவரின் சாட்சியத்தை ஏற்றுக் கொள்வதோ கூடாது என்று தடையுத்தரவு பிறப்பிக்கும் அளவுக்கு நிலைமை மோசமடைந்திருந்தது. முஃதஸிலாக்களின் கொள்கைகளும் அவை சார்ந்த நிலைப்பாடுகளும் குர்ஆன், ஸுன்னாவையும் தூய இஸ்லாமிய அறிஞர்களின் வழிமுறையையும் அடிப்படையாகக் கொண்டு எழுந்த தூய இஸ்லாத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்ததைக் கண்ட இமாம் அஹ்மத்,
முஃதஸிலாக்களுக்கெதிராக மிகவும் துணிச்சலாக செயற்படலானார். இது இமாம் அவர்கள் மேற்கொண்ட ஷதூய இஸ்லாமியப் போராட்டம்| என வர்ணிக்கப்படுகின்றது.
இமாம் அஹ்மதின் இந்நிலைப்பாடு அன்றைய சூழல் வேண்டி நின்றதொன்றாகும்.
அக்லும் நக்லும்
Created On: Sunday, 27 January 2013 16:39

மனிதன் தனது வாழ்வின் நோக்கத்தைப் புரிந்து வாழ்;வாங்கு வாழ்வதற்கு இறைவன் அவனுக்கு 'நக்ல், அக்ல்'; எனும் இருபெரும் வழிகாட்டிகளை வழங்கியுள்ளான். வெறும் 'நக்ல்'; மனிதனுக்கு வழிகாட்டப் போதுமானதல்ல. 'அக்லால்' மாத்திரம் மனிதன் சத்தியத்தை தரிசிப்பதும் சாத்தியமானதல்ல. இரண்டும் இணையும் இடத்தில் தான் மனிதனால் நேர்வழியைக் கண்டு கொள்ள முடியும். ழூஅக்ல், ழூநக்ல் ஆகிய இவ்விரண்டினதும் தேவை பற்றியும் இவற்றுக்கிடையிலான இறுக்கமான தொடர்பு பற்றியும் இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் ஒரு விளக்கம் இங்கு மேற்கோள் காட்டத்தக்கதாகும்.
'ஷரீஆவின் துணையின்றி பகுத்தறிவு நேர்வழியைக் கண்டுகொள்ளாது; பகுத்தறிவின் துணையின்றி ஷரீஆவைப் புரிந்து கொள்ள முடியாது; பகுத்தறிவு அத்திவாரத்துக்கு ஒப்பானது. ஷரீஆவை அதன் மீது எழுப்பப்படும் கட்டடத்துக்கு ஒப்பிடலாம்; கட்டடம் எழுப்பப்படாத நிலையில் வெறும் அத்திவாரத்தில் பயனில்லை; அத்திவாரம் இல்லாத கட்டடம் நிலைக்கப் போவதில்லை; பகுத்தறிவு பார்வையைப் போன்றது; ஷரீஆ வெளிச்சத்தைப் போன்றது; வெளியே வெளிச்சம் இல்லாத நிலையில் பார்வையில் பயனில்லை; பார்வை இல்லாத இடத்தில் வெளிச்சம் இருந்தும் பயனில்லை; பகுத்தறிவு விளக்கைப் போன்றது; ஷரீஆவோ விளக்கை ஏற்ற உதவும் எண்ணெய்யைப் போன்றது; எண்ணெய் இல்லாத போது விளக்கில் புண்ணியமில்லை; விளக்கில்லாத போது வெறும் எண்ணெய் வெளிச்சம் தராது. ஷரீஆ என்பது வெளியே இருந்து கிடைக்கும் பகுத்தறிவாகும்; பகுத்தறிவென்பது உள்ளே இருந்து கிடைக்கும் ஷரீஆவாகும்; உண்மையில் இவையிரண்டும் ஒன்றோடொன்று இணைந்தவை; இரண்டறக் கலந்தவை.....'
இது பற்றி தொடர்ந்து விளக்கும் இமாம் கஸ்ஸாலி அவர்கள், 'பகுத்தறிவென்பது உள்ளே இருந்து பெறப்படும் ஷரீஆவாக இருப்பதனாலேயே பகுத்தறிவை அல்லாஹ் பின்வருமாறு வர்ணிக்க்pன்றான். 'எதில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய ழூபித்ராவாகும்; அல்லாஹ்வின் படைத்தலில் மாற்றம் இல்லை; அதுவே நிலையான தீனாகும்.' (ஸூறா அர்ரூம்: 30) இவ்வசனத்தில் அல்லாஹ் பகுத்தறிவை 'தீன்'; என வர்ணித்துள்ளதைக் காணலாம். மேலும் ஷரீஆவும், பகுத்தறிவும் (பித்ரா) இரண்டறக்கலந்தவை என்பதனாலேயே அல்லாஹ் அவையிரண்டையும் இரு ஒளிகள் என அல்-குர்ஆனில் வர்ணிக்கின்றான். (பார்க்க: ஸூறா அந்-நூர்: 35)'
சத்தியத்தை அறிந்து கொள்ளவும் நேர்வழியைத் தெரிந்து கொள்ளவும் வஹியுடன் பகுத்தறிவின் துணையும் அவசியம் என்பதை அல்-குர்ஆன் பல இடங்களில் விளக்கியுள்ளது. உதாரணமாக பின்வரும் அல்-குர்ஆன் வசனங்களை இங்கே குறிப்பிடலாம்.
' அல்லாஹ்தான் இந்த வேதத்தையும், மீஸானையும் சத்தியத்தின் அடிப்படையில் இறக்கியருளினான்.....' (அஷ்-ஷூறா: 17)
' நிச்சயமாக நாம் தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளுடன் அனுப்பினோம். மேலும் மனிதர்கள் நீதியின் அடிப்படையில் நிலைப்பதற்காக அவர்களுடன் வேதத்தையும் ஷமீஸானையும்' இறக்கினோம்.....' (அல்-ஹதீத்: 57)
இவ்விரு வசனங்களிலும் இடம்பெற்றுள்ள ஷமீஸான்'(தராசு) எனும் பிரயோகம் பகுத்தறிவைக் குறிக்கும் என்பது பல அறிஞர்களின் விளக்கமாகும்.
மேற்குறிப்பிட்ட சுருக்கமான விளக்கம் இஸ்லாத்தில் பகுத்தறிவுக்குரிய இடத்தையும் அதன் செல்வாக்கையும் புரிந்து கொள்ளப் போதுமானதாக இருக்கும் என நம்புகின்றேன்.
அல்லாஹ் இருக்கின்றான்; அவன் ஒருவனே என்பதை வஹி வலியுறுத்துவது போலவே இவ்வடிப்டையான உண்மையைப் புரிந்து கொள்ள பகுத்தறிவும் துணைபுரிகின்றது. மேலும் வஹியின் வசனங்களை விளங்கவும் அவற்றின் அடியாக சட்டங்களைப் பெறவும் துணைபுரிவது பகுத்தறிவாகும். வஹியின் ஒளியில் மனிதனுக்கு நன்மை பயப்பவை, கேடு விளைவிப்பவை தொடர்பான விதிகளை வகுக்கவும் பகுத்தறிவின் தேவை இன்றியமையாததாகும். இவ்வாறு வஹியை மனித வாழ்வில் பிரயோகிப்பதற்கு பகுத்தறிவின் துணையுடன் மேற்கொள்ளும் ஆய்வு முயற்சியே 'இஜ்திஹாத்'; எனப்படுகின்றது. இஸ்லாமிய ஷரீஆவின் வளர்ச்சிக்கும், விருத்திக்கும் துணைபுரிகின்ற, அதன் உயிரோட்டத்தைக் காக்கின்ற, எல்லா இடங்களுக்கும், காலங்களுக்குமான அதன் ஏற்புடைமைக்கும் பொருத்தப்பாட்டுக்கும் உத்தரவாதமளிக்கின்ற இஸ்லாத்திற்கேவுரிய தனித்துவமான ஒரு கோட்பாடே ' இஜ்திஹாத்' ஆகும். இன்றைய இஸ்லாமிய உலகம் எதிர்நோக்கியுள்ள சவால்களுள் சிந்தனைச் சிக்கல் என்பது குறிப்பிடத்தக்கவொன்றாகும். அந்த வகையில் சிந்தனைத் தெளிவை வேண்டி நிற்கின்ற ஒரு முக்கியமான பொருளாக இஜ்திஹாதைக் குறிப்பிட்டால் அது மிகையாகாது.
'அக்ல்'- பகுத்தறிவு
'நக்ல்'- அல்-குர்ஆன் ஸூன்னா அடங்கலான வஹி
'பித்ரா'- (அடிப்படையில் இயற்கையைக் குறிக்கும்) அல்-குர்ஆன் பகுத்தறிவு எனும் பொருளில் இப்பதத்தைக் கையாண்டுள்ளது
அஷ்-ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத்
பிரதிப் பணிப்பாளர், ஜாமிஆ நளீமிய்யாக் கலாபீடம்
Page 37 of 64
<< Start < Prev 31 32 33 34 35 36 37 38 39 40 Next > End >>
