Sheikhagar.org - Official site for sheikhagar

ஹலாலும் ஹராமும் - தொடர் உரை - பாகம் 6

Created On: Wednesday, 23 October 2013 15:22

audio Download Here

 

ஈத் பெருநாள் நிகழ்ச்சி - அகமும் புறமும்

Created On: Saturday, 19 October 2013 07:34

JavaScript is disabled!
To display this content, you need a JavaScript capable browser.

 

துல் ஹிஜ்ஜாவும் ஹஜ்ஜுப் பெருநாளும்

Created On: Monday, 07 October 2013 17:13


பெருநாள் தினத்தை மறுமையோடு ஒப்பிட முடியும். மறுமை நாளில் மனிதர்கள் எவ்வாறு இருப்பார்கள் என்பதனை அல்குர்ஆன் நமக்குச் சொல்லித் தருகிறது.

“அந்நாளில் சில முகங்கள் மகிழ்ச்சியினால் இலங்கிக் கொண்டிருக்கும். சிரித்தவையாகவும் மகிழ்வுடையதாகவும் இருக்கும். ஆனால், அந்நாளில் வேறு சில முகங்கள் மீது புழுதி படிந்திருக்கும். அவற்றைக் கருமை இருள் மூடியிருக்கும்.”                
(ஸூரா அபஸ: 3841)


பெருநாள் தினங்களிலும் சில முகங்கள் இப்படித்தான் இருக்கும். துல்ஹிஜ்ஜா மாதத்தின் முதல் பத்து நாட்களிலும் நோன்பு நோற்று, நற்கருமங்கள் செய்து, இபாதத்தில் ஈடுபட்டவர்களுக்கு இந்த ஹஜ்ஜுப் பெருநாள் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். நற்கருமங்கள் செய்தவர்கள் இந்நாளில் மலர்ந்த முகத்தோடு இருப்பார்கள். அவர்களின் இன்முகங்களில் புன்னகை பூத்திருக்கும்.

மறுபக்கம், இந்த வருடத்தைப் பாழ்படுத்தியவர்கள் அல்லாஹ்வை மறந்து பாவ காரியங்களில் ஈடுபட்டவர்கள்... இந்த துல்ஹிஜ்ஜா  மாதத்தை வீணாகக் கழித்தவர்கள்... ஹஜ் கடமையாக இருந்தும் தை நிறைவேற்றாதவர்கள் இந்த ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் இருள் சூழ்ந்த முகத்தோடு இருப்பார்கள். அவர்களின் முகத்தில் மகிழ்ச்சியோ மலர்ச்சியோ தென்படாது.

எனவே, பெருநாள் தினம் மறுமை நாளுக்கு ஒப்பான ஒரு நாள் என்றால் அதில் மிகையில்லை.

பெருநாள் தினம் ஆடிப் பாடி, கும்மாளமிட்டு வீண் விளையாட்டுகளில் கழிப்பதற்கான ஒரு நாளல்ல. பெருநாள் தினம் திக்ரோடு ஆரம்பிக்கிறது. தொழுகையோடு தொடர்கிறது. திக்ரோடு நிறைவு பெறுகிறது. நல்லமல்கள் புரியக்கூடிய ஒரு நன்னாள் அது. ஈதுல் அழ்ஹா தியாகத் திருநாளை நபி (ஸல்லல்லாஹு லைஹி வஸல்லம்) அவர்கள் காட்டித் தந்த முறைப் பிரகாரம் கொண்டாட வேண்டும்.

பெருநாள் தினத்தில், விசேடமாக பெருநாளுக்காக குளிப்பது ஒரு முக்கியமான ஸுன்னா. நறுமணம் பூசிக் கொள்வதும் இருக்கின்ற ஆடைகளுள் அழகான ஆடைகளை அணிந்து கொள்வதும் பெருநாள் தினத்திலே நாம் கடை பிடிக்க வேண்டிய ஸுன்னாக்கள். ஆடை, அணிகலன்கள் புத்தம் புதியதாக இருக்க வேண்டும் என்பதில்லை. சிறந்த ஆடையாக இருந்தால் போதுமானது.

நபி (ஸல்லல்லாஹு லைஹி வஸல்லம்) அவர்களின் பேரர் ஹஸன்  (ரழியல்லாஹு அன்ஹு)  அவர்கள், “பெருநாள் தினத்திலே எம்மிடம் இருக்கக்கூடிய ஆடைகளுள்  மிகச் சிறந்த ஆடையை நாம் அணிய வேண்டும் எம்மிடமிருக்கும் நறுமணங்களுள் மிக உயர்ந்த நறுமணத்தைப் பூசிக் கொள்ள வேண்டும் எம்மிடமுள்ள கால்நடைகளுள் மிகவும் பெறுமதியான கால்நடையை உழ்ஹிய்யாவாக அறுத்துப் பலியிடவேண்டும் என்று ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹு லைஹி வஸல்லம்) அவர்கள் எமக்குப் பணித்திருக்கின்றார்கள்” எனச்  சொல்கிறார்கள்.  (அல்ஹாகிம்)

இமாம் இப்னுல் கையிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் சொல்கிறார்கள்.

“நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இரண்டு பெருநாட்களின்போதும் தன்னிடம் இருக்கின்ற ஆடைகளுள் மிக அழகான ஆடையைத் தெரிவு செய்து அணிந்து கொள்வார்கள். அவர்களிடம் ஒரு விஷேடமான ஆடை இருந்தது. குறிப்பாக, அந்த ஆடையை ஈதுல் பித்ர் தினத்திலும் ஈதுல் அழ்ஹா தினத்திலும் அவர்கள் அணிவார்கள்.”

Read more..

   

இஸ்லாத்தில் பெண் உரிமை - அகமும் புறமும்

Created On: Thursday, 03 October 2013 18:28

JavaScript is disabled!
To display this content, you need a JavaScript capable browser.

 

கூட்டுறவும் ஒத்துழைப்பும்

Created On: Friday, 27 September 2013 20:44

audio Download Here

   

Page 32 of 64

<< Start < Prev 31 32 33 34 35 36 37 38 39 40 Next > End >>

We have 5 guests online

Login here



Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player