Sheikhagar.org - Official site for sheikhagar
தேசத்தை கட்டியெழுப்புவதில் மதரஸாக்களின் பங்கு
Created On: Tuesday, 22 January 2013 09:28

வசந்தத்தின் வருகை
Created On: Monday, 14 January 2013 07:50

ரபிஉல் அவ்வல் மாதம் மனித இனத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவொன்று. ஏனெனில் மனிதசமூகத்தை இருளிலிருந்து ஒளியின் பால், வழிகேட்டிலிருந்து நேர்வழியின் பக்கம் வழி நடாத்த வந்த நபி முஹம்மது (ஸல்) அவர்கள் பிறந்த மாதம் இது.
'ரபீஉன்' என்றால் வசந்தம் என்பது பொருள். வசந்தகாலம் பூமிக்கு பசுமையையும் அழகையும் வனப்பையும் கொண்டு வருகின்றது. அதுபோல் வசந்தம் எனப் பொருள்படும் 'ரபிஉல் அவ்வலில்' பிறந்த நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மனித சமூகத்திற்கு சுபீட்சத்தையும்,வெற்றியையும்,மகிழ்ச்சியையும்,மனநிறைவையும் கொண்டுவந்தார்கள்.
ஆன்மீக,லௌகீகத் துறைகளிலெல்லாம் பயங்கர வரட்சி நிலவுகின்ற ஒரு காலம் இது. மீண்டும் ஒரு வசந்தத்தின் தேவையை- வருகையை இன்றைய பூமி அவசரமாக வேண்டி நிற்கின்றது. நிச்சயமாக அந்த வசந்தத்தை சுமந்துவரும் ஆற்றல் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கே உண்டு. ஆனால் அவர்கள் மீண்டும் வரப்போவதில்லை. மற்றுமொரு நபி வரப்போவதுமில்லை. எனினும் அன்னார் விட்டுச் சென்ற அல் குர்ஆனும் ஸுன்னாவும் பசுமையாக எங்களிடம் இருக்கின்றன. இன்றைய உலகின் வரட்சியைப் போக்கிடும் ஆற்றல் அவற்றுக்கு நிறைவாகவே உண்டு. ஒருபுத்துலகை புதுப்பொழிவுடன் உருவாக்கும் தகுதியும் உண்டு.
ஆனால் குர்ஆனினதும் ஸுன்னாவினதும் மைந்தர்களோ தூங்கிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் சிலபோது விழித்துக் கொண்டாலும் அடிப்படைப் பணியை மறந்துவிட்டு வீண் வாதப் பிரதிவாதங்களிலும் அர்த்தமற்ற தர்க்க குதர்க்கங்களிலும் ஈடுபடுகின்றனர். நபிகளார் பிறந்த இம்மாதத்தில் அன்னார் கொண்டுவந்த தூதுக்கு உயிரூட்டுவதை, அதனை உலகறியச் செய்வதை விட்டுவிட்டு அன்னாரை வைத்து வீண் சர்ச்சைகளைக் கிளப்பி குழப்பம் விளைவிப்பவர்களும் உண்டு. இதனால் எம் சமூகத்தில் எத்தனை, எத்தனைப் பிரிவுகள்,பிளவுகள் உருவாகியுள்ளன. இத்தகைய சர்ச்சைகளால் இஸ்லாம் அடைந்த பயன்தான் என்ன? நபிகளாரின் தூதுத்துவப் பணி கண்ட பிரயோசனம் யாது? இவ்வாறு நாம் சிந்திப்பதில்லை. சிலர் எம்மை சிந்திக்கவிடுவதில்லை. ஏனெனில் அவர்கள் அந்தப் பிரச்சினைகளில் வாழ்க்கை நடாத்துபவர்கள்.
இனியும் இந்நிலை தொடர அனுமதிக்கலாகாது. நபிகளாரின் பெயராலேயே, அவர்களும் அவர்களின் வழிவந்த நல்லடியார்களும் கட்டியெழுப்பிய இஸ்லாமிய சமூகத்தைத் தகர்க்கும், துண்டாடும் எந்த நடவடிக்கைக்கும் இடமளிக்கக்கூடாது. சிறு சிறு சன்மார்க்க பிரச்சினைகளையெல்லாம் பூதாகரமான பிரச்சினையாக சித்தரித்து சமூகத்தைக் குழப்புவது ஒரு குற்றமும், பெரும் பாவமுமாகும் என்பதை அனைவரும் உணர்தல் வேண்டும். சமூக ஒற்றுமை காலத்தின் இன்றியமையாத தேவை என்பதை கள நிலவரத்தை அறிந்த எவரும் மறுக்கப் போவதில்லை.
வேறுபட்ட சிந்தனைகளையும், அணுகுமுறைகளையும் கொண்ட அமைப்புக்களும், முகாம்களும் இருந்துவிட்டுப்போகட்டும். இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முரண்படாத வகையில் அவற்றின் போக்குகள் இருக்கும் வரை அவற்றை ஆட்சேபிப்பதற்கு இல்லை. அவற்றின் நன்மைகளை சமூகம் பெறத்தான் வேண்டும். ஆனால் அமைப்புகளின் பெயரால் இடம்பெறும் சண்டைகளுக்கும், மோதல்களுக்கும்; முற்றுப்புள்ளி வைக்கப்படல் வேண்டும். உடன்படும் விடயங்களில் இணைந்து செயற்படுவதற்கும், முரண்படும் விடயங்களில் விட்டுக்கொடுப்புடனும், சகிப்புத்தன்மையுடனும் நடந்து கொள்வதற்குமான பக்குவமும் பண்பாடும் எல்லா மட்;டங்களிலும் வளர்க்கப்படல் வேண்டும். அமைப்புகளைக் கடந்த அகில இஸ்லாம் (Pயn ஐளடயஅ) பார்வை எல்லா இயக்கங்கிளனதும் நிகழ்ச்சி நிரலில் முதன்மை அம்சமாக மாறுதல் வேண்டும். இப்புதிய இஸ்லாமிய கலாசாரத்தை நோக்கி சமூகத்தை அழைத்துச் செல்லும் கடப்பாடு எல்லா இஸ்லாமிய அமைப்புகளினதும் தலைமைகளுக்கு உண்டு. குறிப்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா குறித்த கலாசாரத்தை கட்டியெழுப்புவதில் மிகப்பெரும் பங்களிப்பை செய்ய முடியும்; செய்தல் வேண்டும். இத்தகைய காத்திரமான முன்னெடுப்புக்களே ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் மீதுள்ள உண்மையானதும், அர்த்தமுள்ளதுமான அன்பின் வெளி;ப்பாடாக இருக்க முடியும்.
ஸல்லல்லாஹூ அலா முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
21-12-2012 இல் உலகம் அழியுமா? - ஓர் இஸ்லாமிய பார்வை
Created On: Wednesday, 19 December 2012 18:56

சவால்களும், சந்தர்ப்பங்களும்
Created On: Friday, 14 December 2012 18:43

இலங்கை முஸ்லிம்கள் சமாதான விரும்பிகள். வரலாறு நெடுகிலும் அவர்கள் இந்நாட்டில் வாழும் எல்லா சமூகங்களுடனும் பொதுவாகவும், சிங்கள பௌத்தர்களுடன் குறிப்பாகவும் சமாதானமாகவும் நல்லிணக்கத்துடனும் வாழ்ந்து வந்துள்ளனர். வரலாற்றுத்துறைப் பேராசிரியை லோனா தேவராஜா எழுதிய The Muslims of Sri Lanka- One thousand years of ethnic harmony எனும் நூல் இலங்கை முஸ்லிம்களின் சகவாழ்விற்கும் தேசிய பங்களிப்புக்கும் ஆதார பூர்வமாக சாட்சி பகர்கின்றது.
ஆயினும் அண்மைக் காலமாக சில சக்திகள் இந்நாட்டில் வாழும் சமூகங்களுக்கிடையிலான நல்லுறவை சீர்குலைக்கும் வகையிலும் இன முரண்பாடுகளை உருவாக்கும் விதத்திலும் செயற்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக இச்சக்திகள் முஸ்லிம்களை குறி வைத்து இயங்குவதைக் காண முடிகின்றது. இந்நிலை எந்த வகையிலும் ஆரோக்கியமானதல்லளூ அனுமதிக்கத்தக்கதுமல்ல. மூன்று தசாப்தங்களைக் கடந்த உள்நாட்டுப் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு நாட்டில் சமாதானம் மலர்ந்து, மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டு அமைதியாக வாழ முற்பட்டுள்ள இவ்வேளையில் மற்றுமோர் இனமுறுகலுக்கு தூபமிடப்படுவதை நாட்டு நலனில் அக்கறையுள்ள எவரும் அங்கீகரிக்கப்போவதில்லை.
எனவே, அரசு, அதிகாரிகள், மதத்தலைவர்கள், சிவில் சமூகத்தலைமைகள் உட்பட அனைத்துத் தரப்பினரும் காலதாமதமின்றி இப்பிரச்சினைக்கு உடன் தீர்வு காண முன்வரல் வேண்டும். இல்லாதபோது நாடும் மக்களும் பெரும் பாதிப்புக்களைச் சந்திக்க வேண்டி வரும்.
இன்றைய நிலையில் குறிப்பாக முஸ்லிம்கள் விழிப்புடனும், அவதானத்துடனும் நடந்து கொள்ளல் வேண்டும்ளூ வதந்திகளை நம்பலாகாதுளூ சமூகக் கட்டுக்கோப்பைப் பேணி எந்நிலையிலும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளல் வேண்டும்ளூ சமூக ஒற்றுமையைப் பாதிக்கும் வாதப் பிரதிவாதங்கள், தர்க்க, குதர்க்கங்கள், கருத்து மோதல்கள் முதலியன தவிர்க்கப்படல் வேண்டும்ளூ சமூக ஒற்றுமை அனைவரது முதல் முன்னுரிமையாக மாறுதல் வேண்டும். இத்துறையில் உலமாக்களும் தாஇகளும் கூடிய கரிசனை காட்டுதல் வேண்டும்.
மேலும் முஸ்லிம்கள் இச்சந்தர்ப்பத்தில் தங்களுக்கெதிராகப் பரப்பப்பட்டு வரும் விஷமத்தனமான பிரசாரங்களுக்கு நிதானத்துடன் உண்மையானதும் அறிவு பூர்வமானதான விளக்கங்களை வழங்க ஆவண செய்தல் வேண்டும். இந்தவகையில் முஸ்லிம் புத்திஜீவிகள், ஊடகவியலாளரின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. குறிப்பாக இவ்விடயத்தில் முஸ்லிம் மீடியா போரம் தனது பங்களிப்பை சிறப்பாக நிறைவேற்றுதல் வேண்டும்.
சமூகங்களுக்கிடையிலான நல்லுறவை பலப்படுத்தும் வகையில் பல்வேறு செயற்திட்டங்கள் வகுக்கப்பட்டு முன்னெடுக்கப்படல் வேண்டும். முஸ்லிம்களைப் பற்றி தப்பெண்ணம் கொண்டு அவர்களுக்கெதிராக செயற்பட்டு வரும் சக்திகளை அடையாளம் கண்டு அவற்றுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடல் வேண்டும். இத்தகைய முயற்சிகள் முஸ்லிம்கள் பற்றி நிலவும் சந்தேகங்களைக் களைவதற்கும் நல்லெண்ணத்தை வளர்ப்பதற்கும் உதவலாம். இத்துறையில் ஜம்இய்யமுல் உலமாவின் கீழ் இயங்கும் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான கவுன்ஸிலின் முன்னெடுப்புக்களுக்கு அனைவரும் பூரணமான ஒத்துழைப்பை வழங்க முன்வரல் வேண்டும். முஸ்லிம் கவுன்ஸில் அமைப்பின் முயற்சிகளுக்கும் அனைவரும் துணை நிற்பது அவசியம். இவ்விடயத்தில் முனைப்புடன் செயற்படுகின்ற மற்றும் பல முஸ்லிம் அமைப்புகளினதும் பணிகள் பாராட்டத்தக்கவையும் எல்லோரது ஈடுபாட்டையும் வேண்டி நிற்பவையுமாகும். அனைத்திற்தும் மேலாக முஸ்லிம்கள் அல்லாஹ்வின் பக்கம் திரும்புதல் வேண்டும்ளூ தௌபா, இஸ்திஃபாரில் ஈடுபடல் வேண்டும்ளூ துஆ- பிரார்த்தனை எனும் ஆயுதத்தை கையில் ஏந்த வேண்டும்ளூ சமூகத்தின் பாதுகாப்பிற்காகவும் நாட்டில் அமைதி நிலவவும் அல்லாஹ்விடம் இரைஞ்சுதல் வேண்டும். பாவங்களிலிருந்து விடுபடல், கொடுக்கல், வாங்கல்களில் ஹலால், ஹராம் பேணுதல், அதிகம் தானதர்மங்கள் செய்தல் முதலான அம்சங்களிலும் சமூகம் கூடிய கரிசனை காட்டுதல் வேண்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹுத்தஆலா சமூகத்தையும், நாட்டையும் எல்லா வகையான ஆபத்துகளிலிருந்தும் பாதுகாத்து அருள்புரிவானாக!
திருமணத்தின் நோக்கங்களும் பெண்களின் உரிமைகளும்
Created On: Friday, 07 December 2012 17:26
Page 38 of 64
<< Start < Prev 31 32 33 34 35 36 37 38 39 40 Next > End >>
