சமுக ஒற்றுமையை நோக்கி..

இலங்கை முஸ்லிம் சமூகத்துக்கு மத்தியில் ஒற்றமையை பலப்படுத்தம் வகையில் காத்திரமான முன்னெடுப்புக்கள் காலதாமதமின்றி மேற்கொள்ளப்படவேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும் என குறிப்பிட்டால் அது மிகையாகாது. இந்த வகையில் சமூக ஒற்றுமையை சாத்தியப்படுத்துவதாயின் சில அடிப்படையான உண்மைகள் அனைவராலும் ஆழமாகப் புரியப்படல் வேண்டும்.

ஆரம்பமாக பன்மைத்துவம் (Diversity) என்பது உலக வாழ்வின் ஒரு யதாhத்தம் என்பது சகலரினாலும் புரியப்படல் வேண்டும். பிரபஞ்சம், தாவர உலகம், மிருக உலகம், மனித இனம், தனிமனிதர்கள் முதலான எல்லா மட்டங்களிலும் பன்மைத்துவத்தைக் காணலாம். இவ்வுண்மை ஆழமாக புரியப்படவேண்டும் என்பது போலவே இது தொடர்பான மற்றும் சில உண்மைகளையும் அனைவரும் ஏற்றாகவேண்டும். மாற்றுக்கருத்துக்களும் கொள்கைகளும் உண்டு; எமக்கு மத்தியிலான முரன்பாடுகளை விட உடன்பாடுகளே அதிகம். ஒரு விடயத்தில் ஒன்றக்கு மேற்பட்ட கருத்துக்கள் சரியானவையாக இருக்கலாம்; இவற்றோடு அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டிய ஒரு யதார்த்தம் உண்டு. மார்க்கத்தில் கிளையம்சங்களில் கருததுவேறுபாடுகள் தோன்றுவது தவிர்க்க முடியாதது மாத்திரமல்ல அது சிலபோது வரவேற்கத்தக்கதாகவும் நன்மை பயக்கவல்லதாகவும் அமையலாம் என்பதே அந்த யதார்த்தமாகும்.

சன்மார்க்கக் கண்ணோட்த்தில் சமூக ஒற்றுமையை பேண விரும்புவோர் மேற்குறிப்பிடப்பட்ட அம்சங்களை, விரிவாக அலசி ஆராய்தல் வேண்டும். மேலும்  முரண்பாடுகள் தோன்றும் சந்தர்ப்பங்களிலெல்லாம் பேணவேண்டிய தர்மங்களையும் ஒழுக்கங்களையும் பற்றிய ஒரு பரவலான விழிப்புனர்வும் சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் ஏற்படுத்தப்படல் வேண்டும். இந்தவகையில் கருத்து வேறுபாடுகளின் போது கடைபிடிக்கவேண்டிய சில ஒழுங்குகளை உங்களது கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றோம்.

  • முரண்படுவோருடனுள்ள உடன்பாடுகளையும் ஒருமைப்பாடுகளையும் நோக்குதல்.
  • உடன்படும் விடயங்களில் பரஸ்பரம் ஒத்துழைத்தல்; முரண்படும் விடயங்களில் விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளல்.
  • முரண்பாடுகளின் போது சத்தியத்தை தரிசிப்பதை முழு நோக்கமாகக்கொள்ளல்.
  • மாற்றுக்கருத்துக்களையும் மாற்றுக்கருத்துடையோரையும் மதித்தல்.
  • மாற்றுக்கருத்துடையோர் பற்றி நல்லெண்ணம் கொள்ளல்.
  • கலந்துரையாடல்களுக்கூடாக கருத்து வேறுபாடுளை களைதல் அல்லது குறைத்தல்.
  • தர்க்கம், குதர்க்கம், விவாதம் போன்றவற்றை தவிர்த்தல்.
  • கருத்துப் பரிமாற்றத்தின் போது பண்பாடு பேணுதல்.
  • எதிர்தரப்பினருக்கு அவர்களின் வாதங்களை முன்வைக்க அவகாசமளித்தல்.
  • கருத்து வேறுபாடுகளுக்கு இடமளிக்கும் மார்க்கத்தின் கிளை அம்சங்களில் முடிவான முடிவுகளை வெளியிடாதிருத்தல்.
  • ஆரம்ப கால அறிஞர்களின் கருத்துவேறுபாடுகளை அறிந்திருத்தல்.
  • குப்ர், ஷிர்க் ,பித்அத், ழலாலா முதலான ஷரீஆ சார்ந்த கலை சொற்பிரயோகங்களை ஆழமாக விளங்கி கவனமாகப் பிரயோகித்தல்.
  • நடுநிலைப் போக்கை கடைப்பிடித்தல்
  • தூய்மை பேணலும் சுயவிருப்பு வெறுப்புக்களை தவிர்த்தலும்.
  • தனிநபர் வழிபாடு, கொள்கை வெறி, இயக்க வெறி முதலான ஜாஹிலிய்யத்துகளிலிருந்து விடுபடல்.
  • முஸ்லிம் உம்மாவின் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளின் பால் கவனத்தைக் குவித்தல்.
  • சமூக ஒற்றுமையை முதற்தர முன்னுரிமையாக் கொள்ளல்.


மேற்குறிப்பிடப்பட்ட விடயங்கள்; விரிவாக, விளக்கமாக கலந்துரையாடப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டு சமூகத்தின் எல்லா தரப்பினராலும் கடைப்பிடிக்கப்படுகின்ற போது அல்லாஹ்வின் பேரருளினால் சமூக ஒற்றுமை என்ற நம் அனைவரதும் கனவு மிகக் கிட்டிய எதிர்காலத்தில் நனவாக, உண்மையாக மாறுவது திண்ணம். இன்ஷா அல்லாஹ். இந்தவகையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கீழ் இயங்கும் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான கவுன்ஸிலின் கரங்களை சமூகத்தின் எல்லா அணிகளும் பலப்படுத்த முன்வரல் வேண்டும். ஏனெனில் சமூக ஒற்றுமையையும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பும் முக்கியத்துவம் வாய்ந்த பணியில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் ஓர் அமைப்பே குறித்த கவுன்ஸில் ஆகும் என்பது யாவரும் அறிந்ததே.

We have 66 guests online

Login here



Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player