வாழ்த்துச்செய்திகள் - நிர்வாகத்தார் - இஸ்லாமிய அழைப்புப் பணி மையம்
Last Updated (Saturday, 01 November 2008 06:43) Thursday, 30 October 2008 07:05
நிர்வாகத்தார் - இஸ்லாமிய அழைப்புப் பணி மையம்
இலங்கை ஜாமிஆ நளீமிய்யா பல்கலைக்கழகத்தில் பல்லாண்டுகாலமாக பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய, பன்னூல் ஆசிரியர், தலைசிறந்த இநைநெறிப் பேச்சாளர் அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் நளீமி அவர்கள், தமிழ் மொழி பேசக்கூடிய முஸ்லிம்களுக்கென்று இலண்டன் மாநகரிலுள்ள ஈஸ்ட்ஹேமில் முதன் முதலாக அமையப்பெற்ற இஸ்லாமிய அழைப்புப் பணி மையம் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ள, தீனின் சமூக சேவை அமைப்பகத்திற்கு வருடந்தோரும் வருகை தந்து ஆன்மீகப் பயிற்சி வகுப்புக்களை நடாத்தி வருகின்றார்கள். வாழ்விலிருந்தும் ஆதாரங்களைச் சமர்ப்பித்து, ஸஹாபாக்கள், தாபிஈன்கள், இமாம்கள் ஆகியோரின் விளக்கங்களைத் தெளிவுபடுத்தி, அழியும் இவ்வுலகின் ஆர்ப்பரிக்கும் அன்றாட பிரச்சினைகளைச் சமாளிப்பது எப்படி? அல்லாஹ்வின் சோதனைகள் அடுத்தடுத்து வரும்போது பொறுமையாகவிருந்து நேர்வழியில் நிலைப்பது எப்படி? அறியாமல் செய்யும் நற்கருமங்களைவிட மார்க்கம் அறிந்து மனதால் உணர்ந்து செய்யும் நற்காரியங்கள் சிறந்து விளங்குவது எவ்வாறு? என்று பல விரிவுரைகளைப் பாடமாக இங்கே நடாத்தி வருகிறார்கள். அவர்களின் எழுத்துப் பணியும் பேச்சாற்றலும் கல்வி கற்பித்தலும் இச்சமுதாய நலனுக்காகவே பயன்படுகின்றது என்பதை நாங்கள் உளப்பூர்வமாகக் கூறுகின்றோம்.
அவர் எடுத்துக்கூறும் அறிவுபூர்வமான விளக்கங்களை அனைத்துச் சகோதர, சகோதரிகளும் கேட்டுப் பயன் அடைய வேண்டும் என்று நாங்கள் பெரிதும் விரும்புகின்றோம்.
ஷேய்க் அகார் அவர்களின் அரிய கருத்துக்களும் இனிய சொற்பொழிவுகளும் இணையத்தளத்தில் வெளியாகி உலகம் முழுவதும் வாழுகின்ற தமிழ் பேசும் இஸ்லாமிய மக்களுக்கு பயன்தரக்கூடிய ஏற்பாடு ஆரம்பமாகிவிட்டது என்ற செய்தியை அறிந்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம்.
அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் நளீமி அவர்களின் மார்க்கப்பணி, சமுதாயப்பணி, பொதுநலத்தொண்டு மென்மேலும் வளர்ச்சியடைய வேண்டுமென வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றோம்.
நிர்வாகத்தார்,
இஸ்லாமிய அழைப்புப் பணி மையம்,
கிழக்கு லண்டன்
இடண்டன்.
