வாழ்த்துச்செய்திகள் - அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி
Last Updated (Saturday, 01 November 2008 06:43) Thursday, 30 October 2008 07:05
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி
இணையம் அல்லாஹ்வின் மிகப் பெரும் அருளாகும். விரிந்து பறந்த உலகை விஞ்ஞானம் இதன் மூலம் உள்ளங்கைக்குள் கொண்டு வந்துள்ளது. இந்த மாபெரும் அறிவியல் வளம் அழிவிற்கும், ஆபாசத்திற்குமே அதிகம் பயன்படுத்தப்படுகின்றது என்பது கசப்பான உண்மையாகும். இதே வேளை இஸ்லாத்திற்கு எதிரான பிரச்சார ஊடகமாக இஸ்லாத்தின் எதிரிகளாலும், காதியானிகள் போன்ற வழிகெட்ட அமைப்புக்களாளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும். இதே வேளை பல்வேறு இஸ்லாமிய அமைப்புக்களும், நவீன கால அறிஞர்களும் இணையத்தினூடாக தூய இஸ்லாமியப் பணியை முன்னெடுத்து வருகின்றனர்
தமிழ் மொழி மூலம் பல இஸ்லாமிய இணையங்கள் இயங்கி வந்தாலும் சிங்கள மொழி இஸ்லாமிய இணையங்கள் இல்லாமை மிகப் பெரும் குறையாகும். இவ்வேளையில் தமிழ், சிங்கள இணையப் பிரியர்களின் இஸ்லாமியத் தாகத்தைத் தணிக்க ளாநiமாயபயச.ழசப களம் இறங்கியிருப்பது மகிழ்வளிக்கின்றது.
தமிழ் உலகுக்கு நன்கு பரிச்சயமான தலை சிறந்த எழுத்தாளரும், பேச்சாளருமான அஷ்ஷெய்க் ஏ.சி அகார் முஹம்மத் (நளீமி) அவர்களது ஆழமான, இந்த அறிவுப்பணி தமிழ், சிங்கள உலகில் எழுச்சிமிக்க இஸ்லாமிய சிந்தனையை ஏற்படுத்த எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றேன்.
எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி
ஆசிரியர்
உண்மை உதயம்
இஸ்லாமிய மாத இதழ்
