வாழ்த்துச்செய்திகள் - கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி அவர்கள்
Last Updated (Saturday, 01 November 2008 06:43) Thursday, 30 October 2008 07:05
கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி அவர்கள்
அஷ்ஷெய்க் ஏ.ஸி. அகார் முஹம்மத் அவர்களின் எழுத்துக்கள், பேச்சுக்கள் உள்ளடக்கப்பட்ட ஓர் இணையத்தளம் ஆரம்பிக்கப்படுவது பற்றி அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அவரது ஆக்கங்கள்மக்கள் மத்தியில் பரவலாக்கப்பட்டு பயனடைவதற்கு இது ஒரு சிறந்த ஊடகமாக விளங்கும். இஸ்லாமிய தஃவாவைப் பொறுத்தவரையில் சமகால தொழில் நுட்ப வளர்ச்சியினூடாக உருவாகின்ற சாதனங்களைப் பயன்படுத்துவது காலத்தின் தேவை மட்டுமன்றி அது சன்மார்க்கக் கடமையுமாகும். இந்த வகையில் இந்த இணையத்தளம் தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கு மிகவும் பயனளிக்கும் என்பது எனது ஆழ்ந்த நம்பிக்கையாகும்.
கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி,
பணிப்பாளர்,
ஜாமிஆ நளீமிய்யா பேருவளை
