Sheikhagar.org - Official site for sheikhagar
சமூக எழுச்சிக்கான வழிமுறைகள்
Created On: Friday, 08 April 2016 09:54

(அஷ்ஷெய்க் ஏ.ஸி. அகார் முஹம்மது தமிழ் கூறும் நல்லுலகு அறிந்த சிந்தனையாளர், பேச்சாளர். இலங்கை ஜமாதுல் உலமாவின் துணை தலைவரும், புகழ்பெற்ற ஜாமிஆ நளீமிய்யாவின் துணை இயக்குநரும் ஆவார். புதிய விடியல் இணை ஆசிரியர் ரியாஸ் அஹமது, அகார் முஹம்மது அவர்களை நேரடியாக சந்தித்து உரையாடிய போது, அவர் கூறிய கருத்துகள் வாசகர்களுக்கு கட்டுரை வடிவில் வழங்கப்படுகிறது)
இஸ்லாமிய உலகத்தின் அண்மைக் கால வரலாற்றில் ஒரு மோசமான காலக்கட்டத்தை இஸ்லாமிய உலகம் கடந்து கொண்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல. ஒரே சமயத்தில் பல்வேறு துறைகளிலும் ஒரு பயங்கரமான வீழ்ச்சியை நாம் காண்கிறோம். ஆன்மீகம், கல்வி, பொருளாதாரம், அரசியல், அறிவியல், பண்பாடு என பல்வேறு துறைகளிலும் ஒரு இக்கடான காலக்கட்டத்தை இஸ்லாமிய சமூகம் சந்தித்து வருகிறது.
அரபு வசந்தத்தை தொடர்ந்து ஒரு மாற்றம் வரலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அந்த எதிர்பார்ப்பு கைகூடவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயம். இந்த வீழ்ச்சிக்கு இரண்டு விதமான காரணங்களை அடையாளம் காணலாம். ஒன்று, வெளியில் இருந்து வீசப்படும் சவால்கள். மத்திய கிழக்கின் நாடுகளை ஒன்றன் பின் ஒன்றாக ஒன்றும் இல்லாமல் ஆக்க வேண்டும் என்பதற்கான திட்டம் பல ஆண்டுகளுக்கு முன்னரே தீட்டப்பட்டுவிட்டது. இஸ்லாத்தின் எழுச்சியை, முஸ்லிம்களின் எழுச்சியை தாங்கிக் கொள்ள முடியாத சக்திகள் இந்த சதிகளை தீட்டுகின்றன.
எல்லா காலங்களிலும் முஸ்லிம் சமூகம் இந்த சதிகளை எதிர்கொண்டுள்ளது. முஸ்லிம் சமூகம் உள்ளூக்குள் பலமாக இருந்ததால் இந்த அறைகூவலை அதனால் எளிதாக எதிர் கொள்ள முடிந்தது. ஆனால், துரதிஷ்டவசமாக, வெளிப்புற சவால்கள் இருந்தபோதும், உள்ளுக்குள்ளேயே பல சவால்களையும் எதிர் நோக்குகிறோம். ஒரு காலத்தில் அரசியல் ரீதியாக முஸ்லிம் சமூகம் பிளவுபட்டது. மொழி ரீதியாக, பிரதேச ரீதியாக, இன ரீதியாகவும் பிளவுகள் ஏற்பட்டன. அண்மைக்காலமாக மார்க்கத்தின் பெயராலேயே எதிரும் புதிருமான கருத்துகள் தோன்றியுள்ளன.
எந்தளவிற்கு இந்த பிளவு உள்ளதென்றால், முஸ்லிம் சமூகத்திலேயே ஒரு அணி மற்றொரு அணியை வெறுக்கும் நிலையும் கழுத்தறுக்கும் நிலையும் உள்ளது. சமுதாய பணிகளில் ஈடுபடக்கூடிய அமைப்புகள் இடையேயான பிரச்சனைகள் பூதாகரமாக உள்ளன. மற்றொரு புறம் தரீக்கா அமைப்புகளுக்கும் சமுதாய அமைப்புகளுக்கும் இடையே பிரச்சனைகள் உள்ளன. இவை சமுதாயத்தை பலஹீனப்படுத்துகின்றன. முஸ்லிம் சமூகம் பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு மீண்டும் தலைதூக்க வேண்டுமென்றால் நாம் நம்முடைய முன்னுரிமைகளை தீர்மானிக்க வேண்டும்.
ஜம்இய்யதுல் உலமாவின் அனைவருக்கும் கல்வி
Created On: Friday, 11 March 2016 22:08

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் ிஇனைவருக்கும் கல்வி என்ற கல்வி மறுமலர்ச்சி மாநாடு நேற்றுமுன்தினம் வெள்ளவத்தை எக்ஸலன்சி மண்டபத்தில் நடைபெற்றது. இம்மாநாடு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் மக்தப், பாடசாலைக் கல்விப் பிரிவின் செயற்திட்டங்கள், கல்விக்கான எதிர்காலத் திட்டங்கள், முஸ்லிம் சமூகத்தின் கல்வி மறுமலர்ச்சிக்கான தேவைப்பாடு போன்ற விடயங்கள் தொடர்பாக இங்கு தெளிவுபடுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி, செயலாளர் அஷ்ஷெய்க் முபாரக் மதனி, பிரதித் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.ஸீ.அகார் முஹம்மத், இணை செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.தாஸீம், கல்வித் துறைப் பொருப்பாளர் அஷ்ஷெய்க் முர்ஷித் முழப்பர் மற்றும் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், துறைசார் நிபுணர்கள், மூத்த உலமாக்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
மாநாட்டின் கருப்பொருள் உரையை பிரதித் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.ஸீ.அகார் முஹம்மத் நிகழ்த்தினார். அவர் அங்கு உரையாற்றும் போது,
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அறிஞர்களை மதிக்கும் ஒரு கலாசாரத்தை உருவாக்க வேண்டும் என்ற வகையிலும் அறிவைச் சுமந்தவர்களை வரவேற்கின்ற, கௌரவிக்கின்ற ஒரு பண்பாடு உருவாக வேண்டும் என்றவகையிலும், எமது அடுத்த தலைமுறையினருக்கு தங்களது அபிமானிகளாக, அடையாள புருஷர்களாக நடிகர்களையும் பாடகர்களையும் எடுக்கின்ற நிலை மாறி, அறிஞர்களை தங்களது வழிகாட்டிகளாக எடுத்துக்கொள்ளும் ஒரு முன்மாதிரி உருவாக வேண்டும் என்றவகையில்தான் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இறுதித் தூதரும் உலகம் தழுவிய தூதுத்துவமும்!
Created On: Saturday, 13 February 2016 08:36

முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை நினைவுகூருவது என்பது சாதாரண ஒரு மனிதனை நினைவுகூர்வதல்ல. அது ஒரு நபியை, ரஸூலை நினைவுகூர்வது. சாதாரண ஒரு நபியை, ரஸூலை நினைவுகூர்வதல்ல. இறுதி நபியை (காதமுந் நபிய்யீன்) நினைவுகூர்வது. உலகில் தோன்றிய அத்தனை இறைதூதர்களுக்கும் தலைவராக (ஸய்யிதுல் முர்ஸலீன்) திகழ்ந்த ஒரு நபியை, ஒரு ரஸூலை நினைவுகூர்வதுதான் முஹம்மத் (ஸல்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை நினைவுகூர்வதாகும்.
முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை நினைவுகூருவது என்பது அவர்கள் கொண்டு வந்த ரிஸாத்தை, வஹியை, தீனை நினைவுகூர்வதாகும்.
அந்த வகையில்நாம் நபி (ஸல்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை, அவர்களது வாழ்வை, இறைதூதை, அவர்களுடைய அழைப்பை, அவர்கள் கொண்டு வந்த தீனை, வஹியை நினைவுகூர கடமைப்பட்டுள்ளோம். நபியவர்களின் வாழ்வும் வாக்கும் எமது உள்ளங்களில் எப்பொழுதும் பசுமையாக இருக்க வேண்டும். நாம் ஒவ்வொரு தொழுகையிலும், அத்தஹிய்யாத் அமர்விலும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை நேரடியாக விளித்து பின்வருமாறு ஸலாம்சொல்கிறோம்:
"உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும் அல்லாஹ்வுடைய ரஹ்மத்தும் பரகத்தும் உங்கள் மீது இறங்கட்டும்."
Page 13 of 64
<< Start < Prev 11 12 13 14 15 16 17 18 19 20 Next > End >>
