Sheikhagar.org - Official site for sheikhagar
முஸ்லிம்கள் இந்த நாட்டிற்கு ஒருபோதும் உபத்திரவம் செய்ததில்லை - நேர்காணல்
Created On: Tuesday, 24 November 2009 17:12

சந்திப்பு: சிராஜ் மஷ்ஹூர், ஏ.ஸீ.எம். நதீர், இன்ஸாப் ஸலாஹுதீன்
இலங்கை முஸ்லிம் சமூகம் பெற்றுள்ள புத்திஜீவிகளுள் அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் முக்கியமானவர். அவரது ஆளுமை இலங்கைக்கு வெளியி லும் அறிமுகமான ஒன்று. தனது கருத்துக்களை எப்போதும் தெளிவாகவும் உறுதியாகவும் முன்வைக்கும் ஷெய்க் அவர்கள், இஸ்லாத்தைக் கற்பிப்பதி லும் இஸ்லாமிய சிந்தனையை முன்வைப்பதிலும் சமூக மட்டத்தில் ஆலோ சனைகள் வழங்குவதிலும் தனித்துவமான தகுதியைப் பெற்றவர். இஸ்லா மிய அழைப்புப் பணியில் நீண்ட காலம் அனுபவம் பெற்ற ஷெய்க் அகார் அவர்கள், இஸ்லாத்தின் நடுநிலை சிந்தனையைக் கடைபிடிப்ப தோடு பிரதான நீரோட்டத்தில் பணிபுரிவதையும், வேற்றுமையில் ஒற்றுமை காண்பதையும் வலியுறுத்தி வருகிறார். மீள்பார்வை அவருடன் மேற்கொண்ட நேர்காணலை வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.
இலங்கை முஸ்லிம் சமூகத்தின் இன்றைய முதன்மைப் பிரச்சினைகளாக எவற்றை அடையாளப்படுத்துகின்றீர்கள்?
எந்தவொரு சமூகத்தின் மேம்பாட்டுக்கும் தடையாக இருக்கும் அம்சங்களை சமூகவியல் அறிஞர்கள் அடையாளப்படுத்தியுள்ளார்கள். அந்தவகையில், முத லாவது ஒரு சமூகத்தின் மேம்பாட்டுக்குத் தடையாக இருப்பது பொருளாதாரப் பிரச்சினை. அதனை வறுமை என்றும் சொல்லலாம்.
இரண்டாவது சுகாதாரப் பிரச்சினை. நோய்கள் என்றும் சொல்லலாம். மூன்றா வது கல்விப் பிரச்சினை. இது தவிர இன்னொரு பிரச்சினையையும் இஸ்லா மிய நோக்கில் குறிப்பிடலாம். அதுதான் ஆன்மீக, தார்மீக, ஒழுக்கப் பண் பாட்டுத் துறையில் காணப்படுகின்ற வீழ்ச்சி. இவை ஒரு சமூகத்தின் முன் னேற்றத்திற்குத் தடையாக அமைகின்ற அம்சங்கள். இந்த எல்லாப் பிரச்சினை களும் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் முதன்மைப் பிரச்சினைகளாகக் காணப்படுகின்றன.
ஊழியர் பயிற்சி முகாம் - 1/5 (ஷெய்க் அகார் - உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர்)
Created On: Sunday, 22 November 2009 17:34
செய்யும் தொழில் ஊடாக சுவனம் செல்லலாமா?- 2/2
Created On: Wednesday, 18 November 2009 18:51
Page 60 of 64
<< Start < Prev 51 52 53 54 55 56 57 58 59 60 Next > End >>
