நிகாஹ்: ஒரு பாடநெறி தேவை - 2
Last Updated (Tuesday, 09 June 2015 20:03) Tuesday, 09 June 2015 19:58

பகுதி- 02
அடுத்த தலைமுறையைக் காப்பாற்ற வேண்டுமென்றால் இவர்கள் அறிவூட்டப்பட வேண்டும். இவர்களுக்குத் தேவையான வழிகாட்டல்கள் வழங்கப்பட வேண்டும். இஸ்லாமிய அமைப்புகள், நிறுவனங்கள், ஸ்தாபனங்கள் விதிவிலக்கில்லாமல் இது விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இளைஞர், யுவதிகளை சரியான பாதையில் வழிநடத்துகின்ற பாரிய பொறுப்பிருக்கிறது. இதற்காக பாடநெறி உருவாக்கப்பட வேண்டும். உரைகள் மாத்திரம் போதாது. தரமாகவும் நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டத்துக்கூடாக இளைஞர், யுவதிகள் கட்டம் கட்டமாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.
இலங்கையில் ஐந்து பேரில் ஒருவர் 60 வயதைக் கடந்த வயோதிபர் என்பதை நீங்கள் அறிவீர்கள். இது ஒரு பெரிய பிரச்சினை அல்ல. இலங்கையிலுள்ள ஐந்து பேரில் ஒருவர் மனநோயினால் பாதிக்கப்பட்டுள்தாக National Institute of Mantel Health விடுத்துள்ள அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. இது ஒரு சாதாரண விடயமல்ல.
எமது நாட்டில் வருடாந்தம் ஓர் இலட்சத்துக்கும் மேற்பட்டோர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள். இது மன அழுத்தத்தின் உச்ச நிலை.
எனவே, இத்தகைய ஆபத்தான நிலையிலிருந்து மனிதர்களை மீட்டெடுக்க வேண்டிய கடப்பாடு உலமாக்களை, தாஇகளைச் சாரும்ளூ அவர்களுக்கு ஆன்மீக ரீதியான வழிகாட்டல்கள் வழங்கப்பட வேண்டும். அவர்களது மன அழுத்தத்தை, மன இறுக்கத்தை, மனத் தளர்ச்சியைப் போக்க வேண்டும். எமது சமூகத்துக்கு வழிகாட்ட வேண்டும். பள்ளிவவாசல்கள், மத்ரஸாக்கள், இஸ்லாமிய அமைப்புகள், நிறுவனங்கள் இந்தப் பணியை கச்சிதமாகச் செய்ய வேண்டும்.
குதூகலமாக, மகிழ்ச்சிகரமாக அமைய வேண்டிய குடும்ப என்ற நிறுவனம் இன்று தகர்க்கப்பட்டுள்ளது. இது மேற்குலகின் பயங்கரமான குசநந ஊரடவரசந இனால் ஏற்பட்டுள்ள விளைவு. சடவாதத்தையும் சமய சார்பற்ற கொள்கையையும் அறிமுகப்படுத்திய மேற்குலகம் அழிவை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது. அவர்களால் எமது இளைஞர் சமூகம் மூளைச் சலவை செய்யப்படுகிறார்கள்ளூ அதன் பிடியிலிருந்து அவசரமாக மீள வேண்டியது கட்டாயத் தேவை. இல்லாவிட்டால் எமது சமூகத்தின், அடுத்த தலைமுறையின், எதிர்கால தலைமுறையின் இழப்பு தவிர்க்க முடியாததாகிவிடும். இந்நிலைமை ஏற்படுவதற்கு முன் நாம் விழித்துக் கொள்ள வேண்டும்.
இஸ்லாமிய குடும்பம் குறித்து அல்லாஹ் அல்குர்ஆனில் சொல்வதைப் பாருங்கள்:
'நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.' (அல்குர்ஆன் 30: 21)
இஸ்லாமிய குடும்பத்தில் கணவன்- மனைவியருக்கிடையே அமைதி (ஸகீனத்) நிலவும்ளூ அருள் (ரஹ்மா) நிறைந்திருக்கும்ளூ கவர்ச்சி (மவத்தா) இருக்கும். குடும்ப வன்முறை இருக்காது. கணவனை பொலிஸ்காரனாக மனைவி பார்க்க மாட்டாள். மனைவியை பொலிஸ்காரியாக கணவனும் பார்க்க மாட்டான். பரஸ்பர புரிந்துணர்வு பேணப்படும். தத்தமது கடமைகள் குறித்து கணவனும் மனைவியும் சிந்திப்பார்கள்ளூ அவர்கள் தமது உரிமைகளைப் பற்றி சிந்திக்க நேரமிருக்க மாட்டாது. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:
'தன் கணவனுக்கு நன்றி தெரிவிக்காத பெண்ணை மறுமையில் அல்லாஹ் கருணைக் கண் கொண்டு பார்க்க மாட்டான்.'
எனவே, மனைவி அவ்வப்போது கணவனுக்கு ஜஸாகல்லாஹு ஹைரன், ஷுக்ரன் ஜஸீலா முதலான வார்த்தைப் பிரயோகங்களுக்கூடாக நன்றி தெரிவிப்பதற்கு வெட்கப்படக் கூடாது. மற்றவர்களுக்கு வுhயமௌ அல்லது ஜஸாகல்லாஹு ஹைரன் என்று சொல்கின்ற பெண்கள் தமது கணவனுக்கு நன்றி தெரிவிக்க வெட்கப்படுவதை என்னவென்று சொல்வது?
இன்று வெற்றிகரமாக வாழ்வது எப்படி? கணவனுடைய உள்ளத்தை வெல்வது எப்படி? மனைவியுடைய உள்ளத்தை வெல்வது எப்படி? முதலான தலைப்புகளில் விரிவுரைகள், நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ஆனால், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அன்றே வெற்றிகரமான குடும்ப வாழ்வுக்கு வழிசொல்லித் தந்திருக்கிறார்கள்ளூ வாழ்ந்தும் கட்டியிருக்கிறார்கள்.
'உங்களுக்கிடையில் அன்பளிப்புகளை பகிர்ந்து கொண்டு அன்பை வளர்த்துக் கொள்ளுங்கள்' என்றார்கள் நபியவர்கள்.
மனைவி எதிர்பார்க்காத நிலையில் ஓர் அன்பளிப்பை மனைவிக்கு கொண்டு வந்து கொடுக்கின்றபோது கணவன் எதிர்பார்க்காதபோதும் கணவனுக்குப் பிடித்த உணவை மனைவி தயாரித்துக் கொடுப்பது கணவன்- மனைவிக்கிடையில் அன்பை அதிகரிக்கும். இது ஒரு நபிவழி என்பதை நாம் கவனத்திற்க கொள்ள வேண்டும். இது போன்ற அழகிய ஸுன்னாக்களை உயிர்ப்பிக்காமல் கருத்து வேறுபாடுள்ள கிளை அம்சங்களில் கவனம் செலுத்தி அது பற்றி விவாதித்துக் கொண்டிருப்பதில், மார்க்கத்தின் பெயரால் சண்டையில் ஈடுபடுவதை என்னவென்று சொல்வது?
கணவன்- மனைவி, அண்டை-அயலவர், இரத்த உறசினர், நண்பர்களோடு நபியவர்கள் காட்டித் தந்த வழிமுறைகள் ஏராளம். கொடுக்கல்- வாங்கலில்;, எமது நாளாந்த நடவடிக்கைகள், வாழ்வியல் பண்பாட்டு அம்சங்கள் முதலானவற்றில் மரணித்துக் கிடக்கும் அழகிய ஸுன்னாக்களை உயிர்ப்பிக்க வேண்டும். அப்போதுதான் வாழ்வு இனிக்கும்.
'ஒரு கணவன் தனது மனைவியின் வாயில் ஒரு கவளம் உணவு ஊட்டுவது ஸதகாவாகும்' எனச் சொன்னார்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள். மற்றுமொர் அறிவிப்பில், 'ஸதகாவில் மிகப் ஸதகா ஒரு கணவன் தன் மனைவியுடைய வாயில் ஒரு கவள உணவை வைப்பதாகும்' என வந்துள்ளது.
ஆனால், இன்று நடப்பதோ வேறு. திருமண நாள் அன்று கணவன் மனைவிக்கு கேக் ஊட்டுவது, மனைவி கணவனுக்கு கேக் ஊட்டுவது, அதை புகைப்படம் எடுப்பது, வீடியோ எடுப்பது, முகநூலில் பதிவிடுவது... இவ்வாறு தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர் புதுத் தம்பதியினர்.
திருமண நாளில் கேக் ஊட்டுவது தவறல்ல, அதனை புகைப்படம் எடுத்து ஊரறிய, உலகறியச் செய்வது அசிங்கமானதுளூ அநாகரிகமானது. மார்க்க வரையறைகளை மீறுகின்ற செயலும்கூட.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இந்த உலகத்துக்கு அனுப்பப்பட்டதன் நோக்கம், உலகில் உயர்ந்த ஒழுக்கப் பண்பாடுகளை விதைப்பதற்கும் மனிதனை மனிதனாக வாழ வைப்பதற்கும். பண்பாடுகளின் சிகரங்களை குணத்தின் குன்றுகளை உருவாக்குவதற்கே ஆகும்.
இந்தப் பண்பாடுகள் எமது வாழ்க்கையில் பிரதிபலிக்குமாக இருந்தால், எமது பள்ளிவாசல்களைக் கண்டு யாரும் அஞ்ச மாட்டார்கள்ளூ எங்கள் வீடுகளை, கடைகளைப் பார்த்து யாரும் தப்பெண்ணம் கொள்ள மாட்டார்கள்ளூ ஹலாலுக்கெதிராக போர்க் கொடி தூக்க மாட்டார்கள். எமது பண்பாடுகளிலுள்ள கோளாறின் காரணமாகவே நாம் எமது நாட்டில் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றோம். நாம் இஸ்லாத்தை பிழையாகப் பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டிருப்பதே பிரச்சினைகளுக்கு காரணம் என்ற கசப்பான உண்மையை நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும்.
இஸ்லாம் என்றாலே பண்பாடுதான். கணவன்- மனைவிக்குள்ள உறவு, பெற்றோர்-பிள்ளைக்குள்ள உறவு, சமூக உறுப்பினர்களுக்கிடையிலான உறவு. இவைதான் தீன். அதற்கான வழிகளைத்தான் மார்க்கம் சொல்லித் தந்துள்ளது.
'நிச்சயமாக எவர்கள் மெய்யாகவே இறையச்சமுடையவர்களாக இருக்கின்றார்களோ அவர்களுடனும், எவர்கள் நன்மை செய்கின்றார்களோ அவர்களுடனும்தான் அல்லாஹ் இருக்கின்றான்.' (16: 128)
ஒரு பக்கம் ஹுகூகுல்லாஹ்ளூ மறுபக்கம் ஹுகூகுல் இபாத். மனிதர்களுக்கான உரிமைகளை எங்கிருந்து வழங்க வேண்டும். எமது வீட்டிலிருந்து, குடும்பத்திலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எவ்வளவு பிஸியாக வாழ்க்கை வாழ்ந்தவர் என்பதை நாம் அறிவோம். 'இப்போது சரியான பிஸி. வீட்டைப் பார்க்க நேரமில்லைளூ மனைவி, பிள்ளைகளைப் பார்க்கக் கூட நேரமில்லை...' என்று நம்மில் பலர் சொல்கின்றனர். ஆனால், தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தனது மனைவி ஆஇஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களோடு ஓட்டப் போட்டியில் கலந்து கொள்கிறார்கள். 'வாருங்கள் இரண்டு பேரும் ஓடுவோம்.' முதலாவது தடவை ஆஇஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் வெற்றி பெறுகிறார்கள். நபியவர்கள் தோற்கிறார்கள். ஆஇஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களுக்கு மிக்க மகிழ்ச்சி. மற்றொரு தடவை இருவரும் ஓடுகிறார்கள். அதில், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் றெ;றி பெறுகிறார்கள். அப்போது நபியவர்கள் ஆஇஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களைப் பார்த்து 'அதற்கு இதென்று' கூறினார்கள்.
ரஸூலுல்லாஹ்வின் முன்மாதிரியைப் பாருங்கள். எவ்வளவு மகிழ்ச்சியாக, குதூகலமாக நபியவர்கள் குடும்ப வாழ்வைக் கழித்திருக்கிறார்கள்.
ஒரு பெருநாள் தினம். அபீசீனிய அடிமைகள் ஆடிப் பாடி 'தப்' அடித்துக் கொண்டிருக்கிறார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அதனைப் பார்த்துவிட்டு ஆஇஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களை அழைத்து அந்தக் காட்சி பார்க்க அழைத்தார்கள். இது பற்றி ஆஇஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் சொல்கிறார்கள்:
'ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்குப் பின்னால் நின்று நான் அந்தக் காட்சியைப் பார்த்தேன். நபியவர்கள் எனக்குப் பார்ப்பதற்கு வசதியாக (ஒழுங்காகப் பார்ப்பதற்காக) தனது புஜத்தைத் தாழ்த்தினார்கள். கொஞ்ச நேரம் சென்றதும் 'போதுமா?' என்று கேட்டார்கள். 'நான்; இன்னும் கொஞ்சம் பார்க்க வேண்டும்' என்று கூறினேன். 'சரி பாருங்கள்' என்றார்கள். மீண்டும் சிறிது நேரத்தின் பின் 'போதுமா?' என்று கேட்டார்கள். 'போதும்' என்றேன். அப்போது 'உள்ளே செல்லுங்கள்' என்றார்கள்'
இந்த ஸுன்னத்துக்களெல்லாம் எங்கே போனது? இவையெல்லாம் நபிவழி இல்லையா? இவை அழகான ஸுன்னாக்கள். உள்ளத்துக்கு ராகத்தான ஸுன்னாக்கள். எவ்வளவு தூரம் நாம் இவற்றைப் பின்பற்றுகிறோம்?
ஒரு தடவை அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களோடு பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ஆஇஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் அங்கு வருகிறார்கள். அங்கு வந்த அவர், நபியவர்களோடு கொஞ்சம் சப்தத்தை உயர்த்தி வாதம் புரிவது போல் பேசுகிறார்கள். அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு கோபம் வந்து விட்டது. 'அல்லாஹ்வின் ரஸூலோடு எனது மகள் நடந்து கொள்ளும் விதமா இது?' என்று கூறியவாறு அவரை அடிக்கச் செல்கிறார்கள். நபியவர்கள் அடிக்கவிடாது அவரைத் தடுக்கிறார்கள். பின்னர் அங்கிருந்து அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் சென்று விட்டார்கள். நடந்ததை நினைத்து ஆஇஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் கவலைப்பட்டார்கள்; வெட்கமடைந்தார்கள். நபியவர்கள் தனது மனைவி ஆஇஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களிடம் சென்று, 'உங்களது தந்தை உங்களை அடிக்க முயற்சித்தார்? அப்படி உங்களை அடிக்க விடுவேனா நான்? நீங்கள் எனது மனைவியல்லவா?' என்றார்கள்.
எவ்வளவு அழகான கவுன்ஸிலிங்! அற்புதமான அணுகுமுறை! எப்படிப்பட்ட இங்கிதம்!
இப்படி நபியவர்கள் வாழ்வின் சகல துறைகளுக்கும் வாழ்க்கைப் பாடம் சொல்லித் தந்திருக்கிறார்கள். இவையெல்லாம் கணவன்- மனைவியிடம் இருந்து, பெற்றோர்- பிள்ளைகளிடமிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும்.
