ஹிஜ்ரத்: வரலாற்றுப் பின்னணியும் கற்றுத் தரும் பாடங்களும்
Last Updated (Friday, 18 December 2009 11:10) Wednesday, 16 December 2009 15:25

இலங்கை முஸ்லிம் சேவையில் நத்வதுல் அஃப்கார் எனும் ஆய்வரங்க நிகழ்வில் கலாநிதி எம்.ஏ.எம். ஷுக்ரி அவர்களும் அஷ்ஷெய்க் ஏ.சீ. அகார் முஹம்மத் அவர்களும் நிகழ்த்திய கலந்துரையாடலின் சுருக்கம்.
ஓர் ஆண்டுக்கு விடைகொடுத்து மற்றோர் ஆண்டை வரவேற்பது உலக வாழ்வின் இயல்பு. ஒரு மாதத்துக்கு விடைகொடுத்து மற்றொரு மாதத்தையும் ஒரு வாரத்துக்கு விடைகொ டுத்து மற்றொரு வாரத்தையும் ஒரு நாளுக்கு விடைகொடுத்து மற்றொரு நாளையும் வரவேற்று, இறுதியில் எமது ஆயுளுக்கு விடை கொடுக்கும் ஒரு நாளையும் சந்திப்போம்.
ஹிஜ்ரி 1429ற்கு விடைகொடுத்த நாம், அவ்வாண்டில் சாதித்தது என்ன? அவ்வாண்டின் மாதங்களில், வாரங்க ளில், தினங்களில், நிமிடங்களில் ஒவ்வொரு கணப் பொழுதிலும் எவ் வாறு நடந்து கொண்டோம் என்பதை சுயவிசாரணை செய்வதற்கு மிகப் பொருத்தமான சந்தர்ப்பத்தை இந்தப் புதிய ஆண்டின் முஹர்ரம் மாதம் வழங்குகின்றது.
