அநாதை இல்லங்களை ஒன்றிணைக்க நடவடிக்கை
Last Updated (Tuesday, 29 March 2011 20:11) Tuesday, 22 March 2011 18:14

இலங்கையிலுள்ள அநாதை இல்லங்கள் அனைத்தையும் ஒன்றிணைக்கும் நடவடிக்கையில் அநாதை இல்லங்களுக்கான ஒன்றியம் ஈடுபட்டுள்ளது.
குறித்த ஒன்றியம் அநாதைகள் தொடர்பான தகவல்களை மையப்படுத்தல், அநாதை இல்லங்களுக்கிடையிலான தகவல்களை பரிமாறல், அநாதை இல்லங்களை வலுப்படுத்தல் மற்றும் வளப்படுத்தல் போன்ற பல நடவடிக்கையில் இன்ஷா அல்லாஹ் ஈடுபடவுள்ளது.
இதற்கு மேலதிகமாக அநாதை சிறுவர்கள் மற்றும் அநாதை இல்லங்கள் தொடர்பிலான தகவல்களை உள்ளடக்கிய இணையத்தளமொன்றையும் குறித்த ஒன்றியம் இன்ஷா அல்லாஹ் வெளியிடவுள்ளது.
இது தொடர்பில் அடுத்த நடவடிக்கைகளை ஆராய்வதற்காகக 11 பேர் கொண்ட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பான கூட்டமொன்று வெள்ளவத்தை சோனக இஸ்லாமிய கலாசார நிலையத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
அஷ்ஷெய்க் அகார் முஹம்மது அவர்களின் தலைமையில் நடந்த இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி அணுசரணை: www.tamil.dailymirror.lk
இந்த வைபவத்தில் ஆற்றிய உரை :
