மௌலானா தாரிக் ஜமீல் அவர்களின் ஜாமிஆ விஜயம்
Last Updated (Sunday, 02 November 2008 07:56) Thursday, 30 October 2008 06:02
மௌலானா தாரிக் ஜமீல் அவர்களின் ஜாமிஆ விஜயம்
பிரபல பாகிஸ்தானிய அறிஞரும் தாஈயுமான மௌலானா தாரிக் ஜமீல் கடந்த 06-5-2008 ல் களுத்துறை மாவட்ட உலமாக்களின் ஒரு விஷேட அமர்வில் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். ஜாமிஆ நளீமிய்யா கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் அவர்கள் அறிமுக உரையை நிகழ்த்தினார்கள்.

நிகழ்ச்சிக்கான ஒழுங்குகளை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் முப்தி றிஸ்வி அவர்கள் செய்திருந்தார். இந்நிகழ்வில் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட உலமாக்களும் ஜாமிஆ நளீமிய்யா மாணவர்களும் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள். மௌலவி அப்துல் ஹாலிக், மௌலவி புர்ஹான் போன்ற உலமாக்களும் வருகை தந்திருந்தார்கள்.
மௌலான தாரிக் ஜமீல் அவர்களை அறிமுகப்படுத்தி உரை நிகழ்த்தினார் அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் அவர்கள். அறிமுக உரையைத் தொடர்ந்து மௌலானாவுடன் வருகை தந்திருந்த டியுனீஸீயாவைச் சேர்ந்த உஸ்தாத் றம்ஸி அல்ஹபீப் அவர்கள் ஷரீஆத்துறை மாணவர்களுக்கு இருக்கவேண்டிய நாற்பெரும் பண்புகளை சுருக்கமாக விளக்கினார். அவரைத் தொடர்ந்து பிரதான பிரதான உரையை நிகழ்த்தினார் மௌலான தாரிக் ஜமீல் அவர்கள்.
ஸூறா அர்hஃதின் 20 - 22 வரையிலான வசனங்களின் ஒளியில் உலுல் அல்பாப் என அழைக்கப்படும் உலமாக்களுக்கு இருக்க வேண்டிய ஒன்பது பண்புகளை அழகாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் மௌலான தனது உரையில் விளக்கினார்கள். உலமாக்களுக்கு இருக்க வேண்டிய மற்றும் மூன்று பண்புகளை ஒரு நபி மொழியின் வெளிச்சத்தில் அவர்கள் குறிப்பிட்டார்கள்.
ஜாமிஆ நளீமிய்யா நிருவாகத்துடனான கலந்துரையாடலின் போது நிறுவனத்தின் உட்கட்டமைப்பை பெரிதும் பாராட்டிப் பேசிய மௌலானா இது போன்ற அழகும் வசீகரமும் மிக்க ஒர் இடத்தை உலகில் எங்கும் தான் பார்த்ததில்லை எனவும் குறிப்பிட்டார்கள்.
