மாநபிக்கெதிரான மட்டரகமான விமர்சனங்கள்
Last Updated (Sunday, 02 November 2008 08:00) Tuesday, 28 October 2008 14:26
மாநபிக்கெதிரான மட்டரகமான விமர்சனங்கள்

மேற்குலகின் தீய சக்திகள் வரலாறு நெடுகிலும் இஸ்லாத்தையும் நபி (ஸல்) அவர்களையும் இழிவுபடுத்தி வந்துள்ளதைக் காணமுடிகின்றது. அண்மைக் காலம் வரை கீழைத்தேய ஆய்வுகள் எனும் பெயரில் யூத கிறிஸ்தவ சக்திகளின் இஸ்லாம் எதிர்புப் போர் தற்போது ஒரு புது வடிவம் பெற்றுள்ளது. இஸ்லாத்தை கருத்து ரீதியாகவும் கோட்பாட்டு ரீதியாகவும் அணுகி விமர்சிப்பதில் தோல்வி கண்ட இத்தீய சக்திகள் இப்போது பண்பாடற்ற, அநாகரிகமான சில வழிமுறைகளைத் தேர்ந்தெடுத்துள்ளன. இஸ்லாத்தையும் நபி (ஸல்) அவர்களையும் தூசிக்கின்ற, இழிவுபடுத்துகின்ற தக்குறைவான காட்டூன் சித்திரங்களையும் குறுந்திரைப்படங்களையும் தயாரித்து வெளியிட்டு வருகின்றன.

இவை இஸ்லாத்தை பயங்கரவாதத்திற்கு துணை நிற்கும் மாhக்கமாகவும் நபி (ஸல்) அவர்களை காமுகராகவும், இரத்த வெறியராகவும் சித்தரிக்கும் விதத்தில் அமைந்துள்ளன. இவர்களின் இத்தகைய இழிவான குற்றச்சாட்டுக்களுக்கு தக்க பதில்களை பண்பாடக சொல்லும் கடப்பாடு எமக்கு உண்டு.
ஒரு வகையில் இவர்களின் இத்தகைய முயற்சிகள் முஸ்லிம் அல்லாதோர் மத்தியில் இஸ்லாத்தைப் பற்றி அறியும் ஆர்வத்தை தூண்டுவதாகவும் அமைந்துள்ளன. இவர்களின் இத்தகைய விஷமத்தனமான பிரசாரங்களின் விளைவாக மேற்குலகில் என்றுமில்லாத அளவிற்கு அல்குர்ஆன் மொழிபெயர்புகள் மிக வேகமாக விற்பனையாகி வருகின்றன. இச்சந்தர்ப்பத்தை உச்ச நிலையில் பயன்படுத்தி இஸ்லாத்தின் தூதை உலகமயமாக்கும் மகத்தான பணியை நாங்கள் செய்ய முன்வர வேண்டும்.
