வினைத்ததிறன் மிக்க குத்பாக்களை அமைத்துக்கொள்வது எப்படி?
Last Updated (Sunday, 02 November 2008 08:33) Tuesday, 28 October 2008 12:58
வினைத்ததிறன் மிக்க குத்பாக்களை அமைத்துக்கொள்வது எப்படி?
Click Here to download
பேச்சு - ஓர் அருள்
பேச்சு பேசும் திறன் என்பது இறைவன் மனிதனுக்கு வழங்கியுள்ள மிகப் பெரியதோர் அருட்கொடையாகும். மனிதனை ஏனைய உயிரினங்களிலிருந்து வேறுபடுத்தும் பிரதான அம்சங்களில் ஒன்றாக பேச்சு விளங்குகின்றது. இதனாலேயே சமூகவியல் அறிஞர்கள் மனிதனை பேசும் பிராணி என வரைவிலக்கணப்படுத்துகின்றனர்.
தன்னை அளவற்ற அருளாளன் என அறிமுகப்படுத்தும் அல்லாஹ் தனது பேரருளுக்கு சான்றாக தான் மனிதனைப் படைத்து அவனுக்குப் பேசும் ஆற்றலை வழங்கியிருப்பதைக் குறிப்பிடுகின்றான்.
அளவற்ற அருளாளன்ளூ குர்ஆனை அவன் கற்றுக்கொடுத்தான் மனிதனைப் படைத்து, அவனுக்கு பேசவும் கற்றுக் கொடுத்தான்.(55: 1- 4)
பேச்சு ஓர் ஆயுதம்
பேச்சு என்பது ஓர் அருள் மட்டுமல்ல அது ஓர் ஆயுதம். துப்பாக்கிகளால், பீரங்கிகளால் சாதிக்க முடியாததை ஓர் அறிபூர்வமான, உணர்ச்சியுடன் கூடிய உரையினால் சாதிக்க முடியும் என்பதற்கு வரலாறு சான்று பகர்கின்றது. தான் பெற்றிருந்த நாவன்மையை வைத்து மக்களைக் கவர்ந்து, அவர்களை கட்டி வைத்த உலகை ஆண்டவர்கள் தான் எத்தனைப் பேர். இதனால் தான் நபி (ஸல்) அவர்கள் 'பேச்சில் ஒரு வகை வசியம் உண்டு' என்றார்கள்.
கத்தியின்றி இரத்தமின்றி நடை பெறும் யுத்தத்தில் பேச்சும் எழுத்துமே இரு பெரும் ஆயுதங்களாகும்.
நபி (ஸல்) அவர்களின் இலட்சிய போராட்டத்தில் அவர்கள் ஆரம்பமாகப் பயன்படுத்திய ஆயுதம் பேச்சாகும்.
பேச்சு ஒரு கலை
பேச்சாற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும்ளூ பேச்சுக்களை வினைத்திறன் மிக்கதாக அமைத்துக் கொள்ள வேண்டும் என விரும்புகின்றவர்கள் ஆரம்பமாக பேச்சு ஒரு கலை என்பதை புரிந்து கொள்ளல் வேண்டும்.
பேச்சாளர்கள் பிறப்பவர்களா? அல்லது உருவாக்கப்படுபவர்களா? எனும் விடயத்தில் வரலாறு நெடுகிலும் வாதப் பிரதிவாதங்கள் நிலவிவந்துள்ளன. சிலர் பேசுவதற்கென்றே பிறக்கின்றார்கள்ளூ நாவன்மை என்பது அவர்களில் ஒன்றிப் பிறந்த திறமைளூ இதனால் இயல்பாகவே அவர்கள் பேச்சாற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்' என சிலர் வாதிடுவர். இதனால் விரும்பியோர் எல்லாம் பேச்சாளராக மாறமுடியாது என்பது இவர்களின் வாதமாகும்.
ஒருவர் சிறந்த பேச்சாளராக விளங்குவதற்கு அவரின் பிறப்பியல்பு முக்கியமானது என்பதை மறுப்பதற்கில்லை. ஒரு பேச்சு கவர்ச்சிமிக்கதாக அமைவதில் குரல்வளம் முக்கியத்துவம் பெறுகின்றது. குரல் வளம் என்பது பிறப்பியல்புடன் சம்பந்தப்பட்ட வொன்றாகும். ஆனால் பேச்சை வினைத்திறன் மிக்கதாக அமைத்துக் கொள்ள குரல்வளம் போன்ற பிறப்பியல்புகள் மட்டும் போதுமானவையல்ல. இவற்றுடன் அறிவு, பயிற்சி, முதலானவையும் ஒரு பேச்சாளனை உருவாக்க துணை புரிகின்றன. இந்த வகையில் ஒருவர் பேச்சாளராக மாறுவதற்கு இயல்பான திறமையுடன் அறிவும், பயிற்சியும் தேவை என்ற உண்மை உணரப்படல் வேண்டும்.
பேச்சாற்றலை வளர்த்துக் கொள்வது எப்படி?
மேற்கண்ட பின்னணியில் நோக்குகின்ற போது பேச்சாற்றலை வளர்த்துக் கொள்ள நான்கு வழிகள் இருப்பதைக் காணலாம்.
1. இயல்பான திறமை
2. பேச்சுக் கலை தொடர்பான விதிகள், ஒழுங்குகள் பற்றிய அறிவைப் பெறல்
3. புகழ் பெற்ற பேச்சாளர்களின் நடைகளைக் கற்றல்
4. பேச்சுப் பயிற்சி
பேச்சாற்றல் என்பது ஒருவரில் புதைந்து கிடக்கும் இயல்பான திறமையாக இருக்கலாம். ஆனால் அது தொடர்தேர்ச்சியான பயிற்சிகளுக் கூடாகவே வெளிக் கொணரப்படவும் வளர்க்கப்படவும் முடியும்.
நாவு ஓர் உறுப்பாகும். அதனைப் பயிற்றுவித்தால் அது பயிற்சி பெறும். பயிற்சிகளின் மூலம் கைகளும் உடலும் சுமைகளை சுமக்கப் பழக்கப்படுவது போல, நடைபயிற்சியின் மூலம்; நடப்பதற்கு கால்கள் பழகுவது போல பேச்சுப் பயிற்சியின் மூலம் நாவு பேச்சுக்கு பயிற்றுவிக்கப்படுகின்றது. என்றார்கள் காலித் இப்னு ஸல்மான் அவர்கள்.
சித்திரம் கைப்பழக்கம் செந்தமிழ் நாப்பழக்கம் என்பது தமிழ் மேதைகளின் வாக்காகும்.
பிர்அவ்னுக்கு முன்னால் தெளிவாகவும் சரளமாகவும் பேசக் கூடிய ஆற்றலைத் தனக்குத் தரும்படி நபி மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் கேட்ட பிரார்த்தனையை அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது:
எனது இறiவா! எனது நெஞ்சை விரிவாக்கிவைப்பாயாக! எனது காரியத்தை எனக்கு எளிதாக்கியும் வைப்பாயாக! என் நாவிலுள்ள முடிச்சை அவிழ்த்தும் விடுவாயாக! (அப்போது தான்) எனது பேச்சை அவர்கள் விளங்கிக் கொள்வார்கள். (20 : 25-28)
பேச்சின் உள்ளடக்கமும் கட்டமைப்பும் ஒரு விடயத்தை சுருக்கமாகவும் எளிமையாகவும் தெளிவாகவும் கவர்ச்சியாகவும் தாக்கமிக்கதாகவும் முன்வைப்பதிலேயே ஒரு பேச்சின் வெற்றி தங்கியுள்ளது. ஒரு பேச்சை இவ்வாறு அமைத்துக் கொள்வதற்கு கவனத்திற் கொள்ள வேண்டிய சில அம்சங்கள் இருக்கின்றன. அவற்றுள் முக்கியமானவற்றை கீழே நோக்குவோம்.
1. உள்ளடக்கத்தை திட்டமிடல்
பேச்சின் உள்ளடக்கத்தை திட்டமிடும்போது இரண்டு முக்கியமான அம்சங்கள் கவனத்திற் கொள்ளப்படல் வேண்டும். அவையாவன:
1. கேட்போரை (சபையோரை) அறிந்திருத்தல்
2. பேச்சின் கட்டமைப்பை தீர்மானித்தல்
கேட்போரை அறிந்திருத்தல் எனும் போது பேச்சை செவிமடுப்போரின் அறிவுத்தரம், வாழும் சூழல், எதிர் நோக்கும் பிரச்சினைகள் முதலானவற்றை அறிந்திருப்பதைக் குறிக்கும்.
பேச்சின் கட்டமைப்பை தீர்மானிக்கும் போது பின்வரும் அம்சங்கள் முக்கியத்துவம் பெறல் வேண்டும்.
1. தலைப்பைத் தீர்மானித்தல்
2. முன்னுரை
3. தலைப்பை பகுப்பாய்வு செய்தல்
4. தீர்வுகளை முன்வைத்தல்
5. முடிவுரை வழங்கல்
பேச்சை வினைத்திறன் மிக்கதாக அமைத்துக் கொள்ள
ஒரு பேச்சின் வினைத்திறனையும் பயன்படுத்தன்மையையும் அதிகரிப்பதற்கு துணை புரியும் மற்றும் சில அம்சங்கள் பின்வருமாறு.
1. இடை விடாத் தொடர்ச்சி (Continuity)
பேச்சின் போது கருத்துக்களை சங்கிலித் தொடராக இடைவிடாமல் தொடர்தேர்ச்சியாக அமைத்துக் கொள்ளல் வேண்டும். முதலில் குறிப்பிட்ட கருத்துக்கும் அடுத்து சொல்லும் கருத்துக்குமிடையே ஒரு தொடர்பு இருத்தல் வேண்டும். உரையை தொடர்பறுபடாமல் தர்க்க ரீதியாக வளர்த்துச் செல்லல் வேண்டும்.
1. சொற்தேர்வு (Diction)
ஒரு பேச்சின் வெற்றிக்கு சொற்தேர்வு மிக முக்கியமானது. இந்த வகையில் பேச்சின் போது பின்வரும் அம்சங்கள் கவனத்திற் கொள்ளப்படல் வேண்டும்.
1. சிறந்த, பொருத்தமான சொற்களைப் பயன்படுத்துதல்
2. முதிர்ச்சியான சொற்பிரயோகங்களை கையாள்தல்
3. ஓசை ஒழுங்குடன் கூடிய சொற்களுக்கு முக்கியத்துவம் அளித்தல்
4. இடைக்கிடையே எதுகை, மோனைகளை பயன்படுத்துதல்
5. உவமைகள், உருவகங்கள் முதலான மொழி வடிவங்களை பிரயோகித்தல்
6. மக்கள் நினைவில் கொள்ளத்தக்க வசனங்களைக் குறிப்பிடுதல்
அநாகரீகமான, கொச்சையான, முதிர்ச்சியற்ற வார்த்தைப் பிரயோகங்களை எப்போதும் தவிர்த்தல் வேண்டும். அர்த்தமற்ற அடுக்கு மொழியையும் தவிர்த்தல் வேண்டும்.
ஒப்புதல் நுட்பங்கள்
மேற் குறிப்பிட்ட விடயங்களுடன் உரையை நிகழ்த்தும் போது கடைபிடிக்க வேண்டிய சில ஒழுங்குகளையும் பேச்சாளர் தெரிந்து வைத்திருப்பது முக்கியமாகும். இவற்றை ஒப்புவித்தல் நுட்பங்கள் (னுநடiஎநசல வநஉhnஙைரநள) என்பர்.
உடல் மொழியும் (டீழனல டுயபெரயபந யுனெ டீழனல யுஉவழைn) அபிநயமும் பேச்சாளரின் அங்க அசைவுகளும் சைக்கினைகளும் அபிநயமும் பேச்சின் வினைத் திறனை தீர்மானிக்கும் அம்சங்களுள் முக்கியத்துவம் பெறுபவையாகும். உண்மையில் தொடர்பாடாலின் போது வார்த்தைகளின் முக்கியத்துவம் 10 வீதம் மட்டுமே என்பதும் உடல் மொழியே 60 வீத முக்கியத்துவத்தைப் பெறுவதாகவும் ஓசை 30 வீத இடத்தைப் பெறுவதாகவும் னுசு. ளுவநவஎநn ஊழஎநல என்பவர் கூறுகின்றார். இக்கூற்று பேச்சின் போது உடல் மொழி எந்தளவு முக்கியத்துவம் பெறுகின்றது என்பதைக் காட்டுகின்றது.
ஒரு பேச்சை தாக்க மிக்கதாக அமைத்துக் கொள்வதற்கு கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகளுள் பின்வரும் அம்சங்களும் சிறப்பிடம் பெறுகின்றன.
1. பார்வை மூலத் தொடர்பு (Visual Contact)
2. ஓசை (Voice)
3. உரப்பு (ஏழடரஅந)
4. சுருதி (Pitch)
5. பேச்சின் வேகம் (Rate)
6. நேர முகாமைத்துவம் (Time Management)
7. உடை (Dress Code)
முன்கூட்டியே நல்ல நல்ல முறையில் தயார் படுத்துதல், போதிய விளக்கமளித்தல் கேட்போரை ஆர்வமூட்டல் இடை வெளி விட்டுப் பேசுதல் ஆகிய அம்சங்கள் தொடர்பாடலின் போது அவசியம் பேணப்பட வேண்டும் என ஜோன் அடயர் என்பவர் விளக்குகின்றார்.
நபிகளாரின் முன்மாதிரி
ரஸுலுல்லாஹ் (ஸல்) அவர்களின் உரைகளை ஆராய்கின்ற போது அவற்றுல் பின்வரும் சிறப்பம்சங்களை காண முடிகின்றது:
1. சொற் சுருக்கம்
2. பொருட் செறிவு
3. எளிமையான வார்த்தைப் பிரயோகங்கள்
4. நிறுத்தி, நிறுத்தி இடை வெளி விட்டுப் பேசுதல்
5. சில விடயங்களை பல முறை மீட்டுதல்
6. உடல் மொழியைப் பயன்படுத்தல்
7. நீண்ட உரைகளைத் தவிர்த்தல்
8. உறுக்கமாகப் பேசுதல்
நாம் மேலே குறிப்பிட்ட அனைத்து விடயங்களுக்கும் மேலாக ஓர் உரையின் மூலம் உரிய தாக்கமும் விளைவும் கேட்போரில் ஏற்படுவதற்கு பேச்சாளரின் ஆன்மீக நிலை பெரிதும் முக்கியத்துவம் பெறுகின்றது. இவ்வம்சத்தையே ஆமிர் இப்னுல் கைஸ் (ரஹ்) பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்:
'உள்ளத்திலிருந்து வெளியான வார்த்தை உள்ளத்தைச் சென்றடையும்ளூ வெறும் நாவிலிருந்து வெளிப்பட்ட வார்த்தை காதுகளுக்கு அப்பால் கடந்த செல்லாது.
ஒரு சந்தர்ப்பத்தில் இமாம் ஹஸனுல் பஸரி ஒரு மார்க்கச் சொற் பொழிவைக் கேட்டார்கள். ஆனால் அச்சொற்பொழிவு அன்னாரின் உள்ளத்தில் எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்த வில்லை. குறித்த சொற்பொழிவாளரை அணுகிய இமாம் அவர்கள் அவரை விழித்து, ஷஓ மனிதனே! யாருடைய உள்ளத்தில் குழப்பம் காணப்படுகின்;றது? உமது உள்ளத்திலா? அல்லது எனது உள்ளத்திலா? என வினவினார்கள்.
எனவே, முகஸ்துதி, பிரபல்ய நோக்கம், பேர், புகழ் முதலான உலகாயத எதிர்ப்பார்ப்புக்களைத் தவிர்த்து உளத்தூய்மையுடன் இறை திருப்தியை நாடி நிகழ்த்தப்படுகின்ற உரைகளும் பேச்சுக்களுமே கேட்போரில் தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்தவல்லவை என்பதை நாம் மறந்து விடலாகாது.
