ரமழான் கால தஃவாவில் முன்னுரிமை பெற வேண்டிய அம்சங்கள்
Last Updated (Friday, 19 July 2013 21:16) Friday, 19 July 2013 20:55

தஃவா என்பது, இஸ்லாத்தின் அடிப்படைத் தூதை முன்வைக்கின்ற தேநேரத்தில், அவ்வக்கால சவால்களுக்கு முகம் கொடுப்பதும் அவ்வக்கால பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றுக்கான தீர்வை வழங்குவதுமாகும். இந்த வகையில் உலக நிலைவரத்தை வைத்துப் பார்க்கின்றபோது பொதுவாகவும் இலங்கை சூழலை வைத்துப் பார்க்கின்றபோது குறிப்பதாகவும் இக்கால எமது தஃவாவில் இஸ்லாத்தின் அடிப்படையான செய்தி முக்கியத்துவம் பெற வேண்டிய தேவையும் அவசியமும் இருப்பதுபோல முன்னுரிமை பெற வேண்டிய மற்றும் சில அம்சங்கள் உண்டு. அவ்வாறு முக்கியத்துவம் பெற வேண்டிய மூன்று அம்சங்களை அடையாளப்படுத்தலாம்.
ஒன்று, சமூக ஒற்றுமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவது.
இரண்டாவது, இனங்களுக்கிடையான சகவாழ்வின் அவசியத்தை வலியுறுத்துவது.
மூன்றாவதாக இளம் தலைமுறையினனை பண்பாடு உள்ளவர்களாகவும் ஒழுக்கமுள்ளவர்களாகவும் வளர்த்தெடுப்பதன் அவசியத்தை முன்வைப்பது.
இம்மூன்று அம்சங்களும் எமது அடிப்டையான தஃவா முயற்சிகளோடு சேர்த்து முக்கியத்துவம் பெற வேண்டியவையாகும்.
சமூக ஒற்றுமை
முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழக்கூடிய இலங்கை போன்ற ஒரு நாட்டில், பல்வேறு சவால்களுக்கும் அறைகூவல்களுக்கும் முகம் கொடுக்கின்ற இக்;கால கட்டத்தில் இன்றியமையாத ஒரு அம்சம்தான் சமூக ஒற்றுமை. இஸ்லாமிய இயக்கங்கள், ஜமாத்துகள், அமைப்புகள், சங்கங்கள், நிறுவனங்கள் அனைத்திற்கு மத்தியிலும் பரஸ்பர புரிந்துணர்வு கட்டியெழுப்பப்பட வேண்டும். அனைவரும் ஓர் அணியில் ஒரு தலைமைத்துவத்தின்கீழ் இணைந்து செயற்பட வேண்டும். இதில் எவரையும் புறந்தள்ளக்கூடாது. அரசியல் தலைமைகள், உலமாக்கள், சிவில் தலைமைகள், தஃவா சார்ந்த தலைமைகள் அனைவரையும் ஒன்றாக இணைத்துக் கொண்டு ஐக்கியமாக, ஒற்றுமையாக செயல்படுவதன் அவசியம் பரவலாக வலியுறுத்தப்பட வேண்டும். ரமழான் கால தஃவா நிகழ்ச்சிகளில் திகூடிய முக்கியத்துவம் பெறக்கூடிய ஒரு தலைப்பாக இது மாற வேண்டும்.
இனங்களுக்கிடையிலான சகவாழ்வு
இது அடுத்து முக்கியத்துவம் பெற வேண்டிய முக்கிய அம்சமாகும். குறிப்பாக, இன்றைய சூழ்நிலையில் எவ்வளவு தூரம் இது முக்கியத்துவம் பெற வேண்டும் என நான் சொல்லி விளங்க வேண்டிய வசியமில்லை.
ரமழான் கால தஃவாவிலே இதற்கு நியாயமான முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என நினைக்கிறேன். அந்த வகையில் ரமழான் கால தஃவா நிகழ்ச்சிகளில் சமூக நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் நோக்கோடு பரவலான நிகழ்வுகள் இடம்பெற வேண்டிய தேவை அவசியம் இருக்கிறது. குறிப்பாக, இந்த கருப்பொருள் தொடர்பாக முஸ்லிம் அல்லாதவர் மத்தியில் சில வேலைத் திட்டங்களை நாம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. ரமழான் காலத்தை இதற்குப் பொருத்தமான காலமாக நாம் பயன்படுத்த முடியும்.
அதேவேளை, முஸ்லிம்கள் மத்தியில் நாம் மேற்கொள்ள வேண்டிய சில பணிகளும் இருக்கின்றன.
முஸ்லிம் அல்லாதவர் மத்தியில் மூன்று அம்சங்களை முக்கியத்துவப்படுத்த வேண்டும்.
01. முஸ்லிம்கள் பற்றி நிலவுகின்ற தப்பபிப்ராயங்களை களைவதற்கான முயற்சி
02. இஸ்லாம், முஸ்லிம்கள் பற்றி முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்களை அடையாளம் கண்டு களைவதற்கான முயற்சி.
03. சமூக நல்லிணக்கம் பற்றி, பிற சமயத்தவரNhடு நல்லுறவோடு வாழ்வது பற்றி இஸ்லாம் சொல்கின்ற உடன்பாடான போதனைகள் பெரும்பான்மை சமூகத்திற்கு முன்வைக்கப்படும் முயற்சி.
அடுத்து இந்த நாட்டின் மேம்பாட்டுக்காக முஸ்லிம்கள் வரலாறு நெடுகிலும் எத்தகைய பங்களிப்புகளை செய்து வந்திருக்கிறார்கள் என்பதும் முன்வைக்கப்பட வேண்டும்.
அடுத்து முஸ்லிம்கள் மத்தியில் சமூக நல்லிணக்கத்தின் முக்கியத்துவம் பற்றி பரவலான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தற்கு ரமழான் காலம் மிகப் பொருத்தமான காலம். பரவலான தஃவா நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்ற காலம். மஸ்ஜித் பயான்கள், ஹதீஸ் மஜ்லிஸ்கள், கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள், மாநாடுகள், ஒன்றுகூடல் நிகழ்ச்சிகள், குத்பாக்கள் தேபோன்று எமது பத்திரிகை வானொலி, இணையதளம், சமூக ஊடகம், இலத்திரனியல் ஊடகம், அச்சு ஊடகம் மட்டுமன்றி ஏனைய ஊடகங்களுக்கூடாகவும் பிற சமயத்தவர்களோடு பிற இனங்களோடு இலங்கை போன்ற பல்சமய மக்கள் வாழுகின்ற ஒரு நாட்டிலே நாம் எவ்வாறு நல்லுறவை வளர்த்துக் கொண்டு வாழ வேண்டும் என்ற கருத்து பரவலாக வலியுறுத்தப்பட வேண்டிய தேவை இந்த கால கட்டத்தைப் பொறுத்தவரையில் திகமாக இருக்கிறது.
குறிப்பாக, கில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுடைய ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான மைப்பு வெளியிட்டுள்ள இலங்கை வாழ் சமூகங்களுக்கிடையிலான சக வாழ்வு தொடர்பான பிரகடனத்தில் முஸ்லிம் அல்லாதோருடனான உறவின்போது நடைமுறையில் கடைப்பிடிக்க வேண்டிய சில அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை கடைப்பிடிப்பதன் மூலம் சமூக நல்லிணக்கத்தைத் தோற்றுவிப்பதற்கான நல்லதொரு சூழல் இலங்கையில் உருவாகும்.
இளம் தலைமுறையினரை வழி நடத்தல்
இளம் தலைமுறையினை ஒழுக்க ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் வழிநடத்துவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலும் ரமழான் கால நிகழ்ச்சிகள் இடம்பெற வேண்டும்.
இதில் குறிப்பாக, இளைஞர், யுவதிகள் மற்றும் சிறார்களைக் குறிப்பிட்டாலும் பொதுவாக வியாபாரிகள், துறைசார் நிபுணர்கள், புத்திஜீவிகள் மட்டத்திலும் அவரவர் துறை சார்ந்த தர்மங்களை, பண்பாடுகளை, விழுமியங்கைளைப் பேணுகின்ற வகையில் பரவலான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டிய தேவை உள்ளது.
ரமழான் காலத்தில் வழமையான பாரம்பரிய சர்ச்சைகளை அலட்டிக் கொண்டிருக்காமல் வற்றைத் தவிர்த்து, மேற்கூறிய மூன்று அம்சங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். அதே நேரம், வழமைபோல ஆன்மிகம், வணக்க வழிபாடுகள் சார்ந்த அம்சங்கள் உரிய முக்கியத்துவத்தை பெறத் தவறக்கூடாது.
பொதுவாக ரமழான் காலத்தில் தஃவா நிகழ்ச்சிகள் பல மடங்கு திகமாக இடம்பெறுவதுண்டு. பள்ளிவாசல்களில் நடைபெறுகின்ற நாளாந்த பயான்கள், பல மணி நேர இஸ்லாமிய நிகழ்ச்சிகள், இணையதளம், பேஸ்புக் மற்றும் முஸ்லிம் பத்திரிகைகள், சஞ்சிகைகள் ஏனைய பருவ வெளியீடுகளிலும் ஏராளமான இஸ்லாமிய அம்சங்கள் இடம்பெறும். இவை தவிர இஸ்லாமிய அமைப்புகள் நடத்துகின்ற இஸ்லாமிய நிகழ்ச்சிகள் போன்ற அனைத்தினூடாகவும் இவ்வாறான அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது எல்லா வகையிலும் பொருத்தமானது இன்றியமையாததும்கூட.
ஆரம்பத்தில் குறிப்பிட்டது போன்று தஃவா என்பது அடிப்படையான இஸ்லாத்தை முன்வைப்பது போல் அவ்வக்கால சவால்களுக்கு முகம்கொடுப்பதும் அவ்வக்கால பிச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றுக்கான தீர்வுகளை வழங்குவதுமாகும் என்பதனை மீண்டும் நினைவுபடுத்துகின்றேன்.
அல்ஹஸனாதின் ஊடாக மக்கள் இதன் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ள வழி செய்வது போல அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா மற்றும் ஏனைய முஸ்லிம் அமைப்புகள் ஒன்றாக இணைந்து இந்த ரமழான் காலத்து தஃவா நிகழச்சிகளை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக ஒரு வழிகாட்டலை உலமாக்கள், தாஇகள் உட்பட இஸ்லாமிய இயக்கங்கள், அமைப்புகள், மீடியாக்கள் அனைத்திற்கும் வழங்க வேண்டும். இவ்வாறான விடயங்களுக்கு ழுத்தம் கொடுத்து ரமழான் கால தஃவா நிகழ்ச்சிகளை அமைத்துக் கொள்வது நல்லது என்பது வலியுறுத்தப்படுமாயின் இம்முறை ரமழானை வினைத்திறன் மிக்கதாகவும் விளைதிறானாகவும் அமைத்துக்கொள்ள முடியும் இன்ஷா அல்லாஹ்.
